இந்தியாவைத் தொடந்து நிலவை ஆராய்வதற்காக, ஜப்பான் நாடு “ஸ்லிம்” (SLIM) விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணுக்கு இன்று அனுப்பியுள்ளது. முன்னதாகவே, இந்த ஸ்லிம் விண்கலத்தை விண்ணில் அனுப்ப திட்டமிட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக 3 முறை விண்ணில் ஏவப்படுவது ஒத்திவைக்கப்பட்டது.
தற்பொழுது, ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) ஏவிய “ஸ்லிம்” (SLIM) விண்கலம் வெற்றிகரமாக விண்ணுக்கு சென்றுள்ளது. இந்நிலையில், ‘ஸ்லிம்’ விண்கலம் அடுத்த 4 அல்லது 6 மாதத்தில் நிலவை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
SLIM விண்கலம் ஏவப்பட்ட 47 நிமிடங்களுக்குப் பிறகு ராக்கெட்டில் இருந்து பிரிக்கப்பட்டு பூமியின் சுற்றுப்பாதையில் நிறுத்தப்பட்டது. விண்ணுக்கு சென்ற பின், எவ்வாறு சந்திரயான் -3 விண்கலத்தின் சுற்றுப்பாதையை உயர்த்தும், குறைக்கும் பணிகள் இங்கும் அடுத்த சில நாட்களில் நடைபெற இருக்கிறது.
நிலவில் தரையிறங்க ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) மேற்கொண்ட முதல் முயற்சி இதுவாகும். முன்னதாக இந்த ஆண்டு மே மாதம் ஜப்பானிய தனியார் நிறுவனம் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…
இந்தியா : அம்பானிக்குச் சொந்தமான ஜியோ நிறுவனம் தங்களுடைய சிம்களில் புதிய ரீசார்ஜ் திட்டங்களை கொண்டு வந்து பயனர்களைக் கவர்ந்து…
டெல்லி : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலத்தில் அணி நிர்வாகம் வீரர்களை மாற்ற முடிவெடுத்ததை போல…
அசாம் : கடந்த வருடம் ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எங்கு…
அமெரிக்கா : இன்னும் இரண்டு வாரங்களில் அமெரிக்காவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா…