ஜப்பானில் சிரிப்பதை கட்டாயமாக்கி சட்டம் இயற்றம்.!

daily laughter

ஜப்பான் : யமகட்டா மாகாணத்தில் வசிக்கும் மக்கள் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிரிப்பதை கட்டாயமாக்கி சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு மாதத்தின் 8வது நாளை, சிரிப்பு தினமாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமும் சிரித்தால் மன அழுத்தம், பதற்றம் குறைந்து ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும். பொது சுகாதாரம் தொடர்பான ஒரு வகையான நடவடிக்கையில், யமகட்டா யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஜர்னல் ஆஃப் எபிடெமியாலஜியின் ஐந்து ஆண்டுகால ஆய்வை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த முன்முயற்சி, தனிநபர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்ச நேரம் சிரிப்பில் ஈடுபட வேண்டும்.

சிரிப்பு பல நன்மைகளை வழங்குகிறது, இதில் செயல்திறனை மேம்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் மற்றும் நேர்மறை ஹார்மோன்களை வெளியிடுதல் ஆகியவை அடங்கும். சிரிப்பு மன மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை கொண்டுள்ளது. அதில், சிலவற்றை பார்க்கலாம்.

சிரிப்பால் நன்மைகள் என்ன?

  1. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
  2. மன அழுத்தத்தை குறைக்கும் ஹார்மோன்கள்.
  3. வலியை போக்கும்.
  4. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
  5. தசைகளை தளர்த்துகிறது.
  6. மனநல நலன்கள்.
  7. கவலை மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது.
  8. மனநிலையை மேம்படுத்துகிறது.
  9. நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்