கிரகங்களுக்கு இடையேயான ரயில் சேவையை இயக்கும் ஜப்பான்

Default Image

பூமி, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு இடையேயான ரயில்களை இயக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளதது.

உலகின் மற்ற நாடுகள் உடன் ஒப்பிடுகையில் ஜப்பான் தொழில்நுட்பம் எப்போதும் சில ஸ்டெப்கள் முன்னேறியே இருக்கும்.

தற்போது மனிதர்கள் இதர கிரகங்களுக்கு அனுப்புவதே அவர்களின் திட்டம். இதற்கு அவர்கள் ராக்கெட்டை பயன்படுத்தப் போவதில்லை. ரயிலைத் பயன்படுத்தும்  புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

moon tain

இது விசித்திரமாகத் இருந்தாலும் அது உண்மைதான். இந்த திட்டத்திற்க்காக ஜப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் காஜிமா கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளனர்.

நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தில் பூமி போன்ற வாழக்கூடிய சூழலை உருவாக்க இருக்கும் நிலையில், அதனுடன் பூமி, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களை இணைக்கும் வகையில் கிரகங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்து சேவையும் திட்டமிடப்பட்டுள்ளன.

 

பூமியிலிருந்து சந்திரனுக்கு செல்லும் பொது குறைந்த புவியீர்ப்பு சூழலில் மனிதர்கள் உடல்நிலை பாதிக்கப்பட கூடும் என்பதால், அதனை சமாளிப்பதற்கு பூமி போன்ற அம்சங்களுடன் ‘கண்ணாடி’என்ற வாழ்விட அமைப்பை உருவாக்கும் திட்டத்தை குழு அறிவித்தது.

moon station

இந்த ‘தி  கிளாஸ் ‘ திட்டம் பூமியைப் போன்ற வளிமண்டலத்தையும் ஈர்ப்பு விசையையும் கொண்டுள்ளது. மேலும் போக்குவரத்து அமைப்புகள், தாவரங்கள் மற்றும் நீர் ஆகியவை கண்ணாடிக்குள் கிடைக்கின்றன. இது விண்வெளியில் வாழ்வதை எளிதாக்கும்.

 

(காப்ஸ்யூல்) எனப்படும் கிரகங்களுக்கு இடையேயான போக்குவரத்து அமைப்பை உருவாக்கும் பணியிலும் இந்த குழு செயல்படும்.

பூமியை விட்டுத் தொலைவில் செல்லும் போதும், இந்த ஹெக்ஸாட்ராக் அமைப்பில் புவி ஈர்ப்பு விசை பூமியில் இருப்பதைப் போலவே 1G என்ற அளவிலேயே இருக்கும்.

15 மீட்டர் வட்டம் கொண்ட ஒரு மினி-கேப்சூல் பூமியையும் நிலவையும் இணைக்கும். அதேபோல 30 மீட்டர் சுற்றளவு கொண்ட ஒரு காப்ஸ்யூல் நிலவையும் செவ்வாய் கிரகத்தையும் இணைக்கும்.

சந்திரனில் உள்ள ரயில் நிலையம் கேட்வே செயற்கைக்கோளைப் பயன்படுத்தும். மேலும் அது சந்திர நிலையம் என்று அழைக்கப்படும்.

செவ்வாய் கிரகத்தில் உள்ள ரயில் நிலையம் செவ்வாய் நிலையம் என்றும் அழைக்கப்படும். இது செவ்வாய் கிரகத்தின் நிலவான போபோஸில் நிலைநிறுத்தப்படும்.

மனித விண்வெளி அறிவியல் மையத்தின் படி, பூமி உள்ள ரயில் நிலையம் டெர்ரா நிலையம் என்று அழைக்கப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்