டோக்கியோவை விட்டு வெளியேற ஒரு குழந்தைக்கு ₹6 லட்சம் வழங்கும் ஜப்பான்.!
டோக்கியோவை விட்டு வெளியேற, ஒரு குழந்தைக்கு ஜப்பான் அரசு அந்த குடும்பங்களுக்கு ரூ.6 லட்சம் வழங்குகிறது.
ஜப்பானின் டோக்கியோவை விட்டு வெளியேறினால் ஒரு குழந்தைக்கு ஜப்பான் அரசு, ¥1 மில்லியன்(ரூ.6 லட்சம்) அந்த குடும்பங்களுக்கு வழங்குகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் ஜப்பானின் எல்லா பகுதிகளுக்கும் மக்களை, இடமாற்றம் செய்வதையும், பெருநகரங்களில் அடர்த்தியான மக்கள் தொகையைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் குழந்தை ஒருவேளை 18 வயதாக இருந்தால், உயர்நிலைப் பள்ளியின் இறுதி ஆண்டில் இருந்தால் இந்த சலுகையை ஜப்பான் அரசு வழங்குகிறது.