SLIM விண்கலம் ஏவூதலை நிறுத்திவைத்தது ஜப்பான்.!
நிலவுக்கு அனுப்பப்படவிருந்த SLIM விண்கலத்தை விண்வெளிக்கு கொண்டு செல்லும் எச்-ஐஐஏ ராக்கெட்டின் திட்டமிடப்பட்ட ஏவுதலை ஜப்பானின் விண்வெளி நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது.
ஜப்பானின் தெற்குப் பகுதியில் உள்ள ஜாக்ஸாவின் தனேகாஷிமா விண்வெளி மையத்தில் இருந்தும் இன்று அதிகாலை விண்கலம் ஏவப்படவிருந்த நிலையில், வளிமண்டலத்தில் காற்று நிலைமை மோசமாக இருந்த காரணத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் ஏஜென்சி (JAXA) செப்டம்பர் 15ம் தேதிக்குள் ஏவுதல் நடைபெறலாம் என்று கூறியுள்ளன.