சனியின் சந்திரன் டைட்டனில் மேகங்களை படமெடுத்த ஜேம்ஸ் வெப்
உலகின் மிக சக்திவாய்ந்த தொலைநோக்கி, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மற்றும் ஹவாயில் உள்ள WM கெக் ஆய்வகம் ஆகியவை சனியின் மிகப்பெரிய நிலவான டைட்டனில் மிதக்கும் மேகங்களை வெளிப்படுத்தும் படங்களை எடுத்துள்ளன.
பூமியைத் தவிர தற்போது ஆறுகள், ஏரிகள் மற்றும் கடல்களைக் கொண்ட ஒரே கிரகம் டைட்டன். இருப்பினும், பூமியைப் போலல்லாமல், டைட்டனின் மேற்பரப்பில் உள்ள திரவமானது மீத்தேன் மற்றும் ஈத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன்களால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.