பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஜெசிந்தா ஆர்டென்..! புதிய பிரதமர் இவர்தான்…!
ஜெசிந்தாவின் அறிவிப்பை அடுத்து ஆளும் தொழிலாளர் கட்சியின் அடுத்த பிரதமர் வேட்பாளராக கிறிஸ் ஹிப்கின்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஐந்தரை ஆண்டுகளாக பிரதமர் பதவியில் நீடித்த நிலையில், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்து இருந்தார். மேலும், இந்த ஆண்டு அக்டொபரில் நடைபெறவுள்ள தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஜெசிந்தாவின் அறிவிப்பை அடுத்து ஆளும் தொழிலாளர் கட்சியின் அடுத்த பிரதமர் வேட்பாளராக கிறிஸ் ஹிப்கின்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். 44 வயதாகும் கிறிஸ் ஹிப்கின்ஸ், தற்போது அந்நாட்டின் அமைச்சராக இருக்கிறார்.
கடந்த 2008ம் ஆண்டு முதல்முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2020ம் ஆண்டு நவம்பரில் கோவிட்-19 துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். தற்போது இவர், காவல்துறை, கல்வி, பொது சேவை ஆகிய துறைகளின் அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.