அமெரிக்க அதிபர் தேர்தலில் பைடன் VS டிரம்ப் தான்… ஆனா யாருக்கும் நிதி இல்லை – எலான் மாஸ்க்!
America : அமெரிக்காவில் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி ஆகிய இரு இரண்டு முக்கிய கட்சிகள் உள்ளன. தற்போது அதிபராக இருக்கும் ஜோ பைடனின் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில் வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதிபர் வேட்பாளர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் முக்கிய வேட்பாளராகவும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் முக்கிய வேட்பாளராகவும் களமிறங்கினர்.
Read More – காஷ்மீர் சட்டப்பிரிவு 370 ரத்தும்… பிரதமரின் முதல் பயணமும்…
அதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சி உறுப்பினர்கள் ஆதரவை பெற வேண்டும் என்பதால் அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணங்களில் உட்கட்சி தேர்தல் நடைபெற்று வந்தது. இதில், டொனால்ட் டிரம்புக்கு போட்டியாக குடியரசு கட்சி சார்பில் நிறைய பேர் அதிபர் வேட்பாளராக களமிறங்க போட்டியிட்டனர்.
Read More – புத்தகப் பை, பொம்மையுடன் சிறுமியின் இறுதி ஊர்வலம்.! கண்ணீர் மல்க வழியனுப்பிய பொதுமக்கள்.!
குடியரசு கட்சி சார்பில் விவேக் ராமசாமி, நிக்கி ஹேலே உள்ளிட்ட பலர் களமிறங்கிய நிலையில், நிக்கி ஹேலே தவிர மற்ற அனைவரும் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர். இத்தகைய சூழலில் அதிபர் வேட்பாளர் ரேஸில் டொனால்ட் டிரம்புக்கு போட்டியாக நிக்கி ஹேலே தொடர்ந்து களத்தில் இருந்து வந்த நிலையில், பின்னடைவை சந்தித்து வந்தார். தற்போது அவரும் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
Read More – தொடரும் இழுபறி.. இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி முடிவு.! தமிழக காங்கிரஸ் திட்டவட்டம்.!
இதனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் – டொனால்ட் டிரம்ப் இடையே தான் போட்டி என உறுதியாகி உள்ளது. இந்த நிலையில், அமெரிக்க தேர்தலில் அதிபர் வேட்பாளர்கள் யாருக்கும் நிதியளிக்கவில்லை என்று டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் விளக்கமளித்துள்ளார்.
குடியரசுக் கட்சியின் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைச் எலான் மஸ்க் சந்தித்ததாக கூறப்பட்ட நிலையில், தேர்தலுக்காக ட்ரம்புக்கு மஸ்க் நிதி வழங்கவுள்ளதாக தகவல் வெளியானது. எனவே, வரும் அமெரிக்க தேர்தல் தேர்தல்களுக்கு குடியரசுக் கட்சியினருக்கோ அல்லது ஜனநாயகக் கட்சியினருக்கோ நிதியளிக்கவில்லை என்பதை எலான் மஸ்க் தெளிப்படுத்தியுள்ளார்.