மெக்சிகோ சிறையில் துப்பாக்கி சூடு – 14 பேர் உயிரிழப்பு
மெக்சிகோ சிட்டி சிறையில் நடந்த துப்பாக்கி சூட்டில் 14 பேர் உயிரிழந்த நிலையில் 13 பேர் காயம்.
மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் உள்ள சிறையில் நடந்த துப்பாக்கி சூட்டில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிசூட்டில் சிறை அலுவலர்கள் 10 பேரும் கைதிகள் 4 பேரும் உயிரிழந்துள்ளனர். சிறை கைதிகளை பார்க்க வந்த பார்வையாளர்களுடன் நுழைந்த மர்ம நபர்கள் துப்பாக்கிசூடு நடத்தி உள்ளனர். மேலும், சிறையில் நடந்த துப்பாக்கிசூடு மற்றும் கலவரத்தை பயன்படுத்தி 24 கைதிகள் தப்பிவிட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.