2 கோடி வரை சம்பளம்.! கொட்டி கிடக்கும் வேலை வாய்ப்புகள்.! அதீத வளர்ச்சியில் AI தொழில்நுட்பம்.!
AI (செயற்கை நுண்ணறிவு) மென்பொறியாளர்களுக்கு தற்போது வேலைவாய்ப்புகள் குவிந்து வருவதாகவும், அமெரிக்காவில் 2 கோடி ரூபாய் வரையில் சம்பளம் தரப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஐடி துறையானது, படு வேகமாக செயற்கை நுண்ணறிவு திறனான AI பயன்பாட்டிற்கு மாறி வருகிறது. அதற்கேற்றாற் போல, AI, CHATGPT- களின் வளர்ச்சியானது சாதாரண மக்களிடம் வரையில் சென்றுள்ளது.
குவியும் வேலைவாய்ப்புகள் :
தற்போது அதற்கான வேலை வாய்ப்புகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தேர்விக்கின்றன. இந்த வேலை வாய்ப்புகளானது Google parent Alphabet Inc., OpenAI மற்றும் Meta Platforms Inc போன்ற நிறுவனங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
2 கோடி சம்பளம் :
இதில், AI மென்பொறியாளர்களுக்கு, ஆந்த்ரோபிக், கூகுள் ஆதரவு நிறுவனங்களானதுஅமெரிக்கா சான் ஃபிரான்சிஸ்கோவில் 335,000 அமெரிக்க டாலர் வரையில் அதாவது, இந்திய மதிப்பில் வருடத்திற்கு 2 கோடி வரையில் சம்பளம் வழங்குகின்றன.
அதிகரிக்கும் வரவேற்பு :
Google, TikTok மற்றும் Netflix Inc. ஆகிய நிறுவனங்களும் AI பொறியாளர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி வருகின்றன. OpenAI இன் ChatGPT-4, Google Bard மற்றும் மைக்ரோசாப்டின் Bing AI சாட்போட் ஆகிய செயற்கை நுண்ணறிவு வெளியீட்டிற்கு பெரிய மென்பொருள் நிறுவனங்களிடையே வரவேற்பு அதிகமாகி வருகிறது.
அதீத வளர்ச்சி :
25 ஆண்டுகளில், மிக வேகமாக நகரும் ஐடி வளர்ச்சியானது இதுவாக தான் இருக்கும் எனவும், தற்போது இதற்கான சம்பளம் மட்டும் 40,000 இங்கிலாந்து யூரோ மதிப்பில் தொடங்குகிறது, AI (செயற்கை நுண்ணறிவு) திறனை கையாலா தெரிந்த பொறியாளர்கள் உடனடியாக அவர்களின் எதிர்பார்ப்பை (சம்பளத்தை) கூறலாம் என இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் உள்ள ஹேஸில் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் மற்றும் ஆட்டோமேஷன் ஆகியவற்றிற்கான பணியாளர் வணிகத்தை நடத்தும் மார்க் ஸ்டாண்டன் அறிவித்துள்ளார்.