ஜெர்மனில் பயங்கரம்.! பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு.. பலர் உயிரிழப்பு.! பதுங்கிய குற்றவாளி.?

Default Image

ஜெர்மன் ஹம்பர்க் நகரில் நடந்த துப்பாக்கி சூட்டில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.  

ஜெர்மன் நாட்டில் வடக்கு பகுதியில் உள்ள ஹம்பர்க் பகுதியில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். விஷயம் அறிந்து காவல் துறையினர் அப்பகுதியில் குவிந்துள்ளனர்.

இதில் பலர் உயிரிழந்ததை கண்டறிந்துள்ளனர். இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சம்பந்தபட்ட இடத்தை போலீசார் சுற்றிவளைத்து விட்டனர். இதனால் அங்கு பதற்றமான அவசர நிலை பிறப்பிக்கப்பட்டு யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், போலீசார் விரைந்து வந்து சுற்றிவளைத்ததால், குற்றவாளி தப்பிக்க வழியில்லை எனவும், போலீசார் வந்த பிறகும் ஒரு துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆதலால், குற்றவாளி ஒன்று , கட்டிடத்திற்குள் பதுங்கி இருக்க வேண்டும். இல்லையென்றால், தன்னை தானே சுட்டுக்கொண்டு இறந்தவர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்