எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!
ஏமன் நாட்டின் மீது அமெரிக்க ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியதில் இதுவரை 38 பேர் உயிரிழந்ததாகவும், 102 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுக பகுதியை குறிவைத்து நடத்தப்பட்டது எனக் கூறப்படுறது.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் வருவாய் ஆதாரங்களை தடுப்பதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே எண்ணெய் ஏற்றுமதி திறனை தடுக்கும் நோக்கில் துறைமுகம் இலக்கு வைக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது.
இந்தத் தாக்குதலில் 38 பேர் உயிரிழந்ததாகவும், 102 பேர் காயமடைந்ததாகவும் ஏமன் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதில் துறைமுக ஊழியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களும் அடங்குவர். இருப்பினும், இந்த எண்ணிக்கைகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.