ரஷ்யாவின் லூனா-25 மிஷனுக்கு வாழ்த்து தெரிவித்து இஸ்ரோ ட்வீட்!

Luna -25

ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் விண்வெளி ஆய்வு மையம்  இன்று அதிகாலை  நிலவின் தென்துருவ பகுதிக்கு வெற்றிகரமாக லூனா-25 விண்கலத்தை செலுத்தியதிற்கு இஸ்ரோ வாழ்த்து தெரிவித்துள்ளது.

சோயஸ் 2.1வி (Soyuz 2.1v) ராக்கெட் மூலம் லூனா-25 விண்கலம் மாஸ்கோவின் கிழக்கே 5,550 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) ரஷ்ய நேரப்படி அதிகாலை 2.11 மணிக்கு விண்ணில் ஏவியது. இதனை ஒரு மணி நேரம் கழித்து, ரஷ்யாவின் விண்வெளி நிறுவனம் ரோஸ்கோஸ்மோஸ் உறுதிப்படுத்தியது.

லூனா-25 வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு வாழ்த்துகள், Roscosmos ????எங்கள் விண்வெளிப் பயணங்களில் மற்றொரு சந்திப்புப் புள்ளி கிடைத்திருப்பது அற்புதம். சந்திரயான்-3 & லூனா-25 பயணங்கள் தங்கள் இலக்குகளை அடைய வாழ்த்துகள்” என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளது.

கிட்டத்தட்ட 47 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்யா, நிலவின் மீதான ஆராய்ச்சி பணிக்காக விண்கலத்தை விண்ணில் செலுத்தியுள்ள்ளது. ரஷ்யா முதன் முதலாக லூனா-2 விண்கலத்தை 1959 இல் நிலவுக்கு செலுத்தியது. நிலவின் மேற்பரப்பை அடைந்த முதல் ரஷ்ய விண்கலம் லூனா-2 ஆகும். அடுத்து, 1966 இல் லூனா-9 விண்கலமானது நிலவின் மீது மென்மையான தரையிறக்கபட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

pongal Train
Puducherry - Pongal 2025
Sakshi Agarwal Marriage Clicks
AlluArjun
TVK Vijay
Viluppuram - Protest