உலகம் முழுவதும் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகளை கண்டுபிடிக்க இஸ்ரேல் பிரதமர் அதிரடி உத்தரவு!

இஸ்ரேல – ஹமாஸ் இடையான போர் கடந்த அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கி 45 நாட்களை கடந்து நடைபெற்று வருகிறது. இதில் இஸ்ரேல் மக்கள் 1400 பேர் உயிரிழந்ததாகவும்.காசா நகரில் உள்ள பலஸ்தீன மக்கள் சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால், ஹமாஸ் அமைப்பு முற்றிலும் அழியும் வரையில் போர் நிறுத்தம் இல்லை என் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வெளிப்படையாக அறிவித்தார். ஹமாஸ் தரப்பும் இஸ்ரேலை சேர்ந்த பணையக்கைதிகளை இன்னும் விடுவிக்காமல் இருந்து வருகிறது.
இந்த நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகள் காசாவிற்கு வெளியே எங்கிருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டின் மொசாட் உளவு அமைப்பிற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, செய்தியாளர் சந்திப்பில் பேசிய இஸ்ரேலிய பிரதமர், “ஹமாஸ் தலைவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு மொசாட் அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளேன். ஹமாஸின் உயர்மட்டத் தலைவர்களில் பலர் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். அவர்கள் முக்கியமாக வளைகுடா மாநிலமான கத்தார் மற்றும் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருப்பதாக” கூறினார்.
ஏற்கனவே, ஹமாஸ் பிடியில் வைத்திருக்கும் 240 பணயக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை தனது நாடு போரைத் தொடரும் என்றும் இஸ்ரேலிய பிரதமர் கூறியுள்ளார்.
அமைச்சரவை ஒப்புதல்.! 4 நாள் போர் நிறுத்தம் – இஸ்ரேல் அறிவிப்பு.!
4 நாள் போர் நிறுத்தம்
இதற்கிடையில், பணயக்கைதிகளை விடுவிக்க 4 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஹமாஸிடம் பணயக்கைதிகளாக உள்ள 50 பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிக்கவே இந்த போர்நிறுத்தம் எனவும், இது போர் முற்றிலும் நிறுத்துவதற்கான அறிகுறி இல்லை எனவும், எங்கள் இலக்கான ஹமாஸ் முற்றிலும் அழியும் வரை போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் தாக்குதல்.. அல்-ஷிஃபா மருத்துவமனையில் 20க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிரிழப்பு.!
இந்நிலையில், தற்காலிக போர்நிறுத்தத்திற்குப் பிறகு ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போரை முன்னெடுத்துச் செல்வதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் கூறியதாக நெதன்யாகு கூறியுள்ளார். நேற்றைய தினம் தொலைபேசி மூலம் பைடனுக்கு இந்த செய்தியை வழங்கியதாக தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
திறந்தவெளி வாகனத்தில் விஜய்., ஸ்தம்பித்த கோவை விமான நிலையம்!
April 26, 2025