இஸ்ரேலிய இராணுவம் இன்று அதிகாலை பாலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தில் இஸ்லாமிய ஜிஹாத் இயக்கத்தினரை இலக்கு வைத்து நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும், இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என காஸாவிலுள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில், 3 மூத்த இஸ்லாமிய ஜிஹாத் தலைவர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் வடக்கு காசா பகுதிக்கான இஸ்லாமிய ஜிஹாத் தளபதி கலீல் பஹ்தினி, தாரேக் இஸ்ஸல்டீன், இஸ்லாமிய ஜிஹாத்தின் இராணுவ கவுன்சிலின் செயலாளர் ஜெஹாத் கானாம் ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
கடந்த வாரம், இஸ்ரேலிய காவலில் இருந்த ஒரு பாலஸ்தீனியர் போராளியின் மரணம், இந்த இஸ்ரேலுக்கும் காசாவில் ஆயுதக் குழுவினருக்கும் இடையே பல மணிநேர சண்டையாக வெடித்தது. மேலும், இதில் ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார்.
இதை தவிர, 90-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள், 19 இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த இழப்பிற்கு பதிலடியாக இஸ்ரேலிய இராணுவம் காசாவில் ராக்கெட் தாக்குதல்களைநடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டு தோறும் அரசு சார்பில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவது என்பது வழக்கம். இந்த ஆண்டு (9ஆம்…
சென்னை : இந்த ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (ஜன. 6) தொடங்கிய நிலையில், 4-வது நாள்…
கோவா : கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களில் "கோவா செல்லும் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது" என்று பரபரப்பட்டு வரும்…
அமெரிக்கா : லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ள மற்றும் 1,100க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் நொறுங்கின…
நியூசிலாந்து : அணியின் தொடக்க வீரர் மார்டின் கப்டில் தனது 14 வருட சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
திருப்பதி : திருமலை திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்துக்கான டோக்கன் வழங்கும் மையங்களில் ஏற்பட்ட நெரிசல் காரணமாக தமிழகத்தை சேர்ந்த…