இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்.. 4 குழந்தைகள், 3 பாலஸ்தீனிய ஆயுதத் தளபதிகள் உட்பட 12 பேர் பலி..!!

Palestinian

இஸ்ரேலிய இராணுவம் இன்று அதிகாலை பாலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தில் இஸ்லாமிய ஜிஹாத் இயக்கத்தினரை இலக்கு வைத்து நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.

மேலும், இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என காஸாவிலுள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில்,  3 மூத்த இஸ்லாமிய ஜிஹாத் தலைவர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் வடக்கு காசா பகுதிக்கான இஸ்லாமிய ஜிஹாத் தளபதி கலீல் பஹ்தினி, தாரேக் இஸ்ஸல்டீன், இஸ்லாமிய ஜிஹாத்தின் இராணுவ கவுன்சிலின் செயலாளர் ஜெஹாத் கானாம் ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

கடந்த வாரம், இஸ்ரேலிய காவலில் இருந்த ஒரு பாலஸ்தீனியர் போராளியின் மரணம், இந்த இஸ்ரேலுக்கும் காசாவில் ஆயுதக் குழுவினருக்கும் இடையே பல மணிநேர சண்டையாக வெடித்தது. மேலும், இதில் ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார்.

இதை தவிர,  90-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள், 19 இஸ்ரேலியர்கள் மற்றும் வெளிநாட்டினர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த இழப்பிற்கு பதிலடியாக இஸ்ரேலிய இராணுவம் காசாவில் ராக்கெட் தாக்குதல்களைநடத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்