போர் நிறுத்தத்தை மீறிய இஸ்ரேல்? ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்த குற்றச்சாட்டு!
இஸ்ரேல், லெபனான் மீது வான்வெளித் தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

பெய்ரூட் : கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கு இடையேயான போரானது தொடங்கியது. இந்த போரில் ஹமாஸுக்கு ஆதரவாக களமிறங்கியவர்கள் தான் ஹிஸ்புல்லா அமைப்பினர். அவர்களுக்கு ஆதரவாக வந்தவர்கள் தான் இரான்.
ஒரு வருடமாக இவர்கள் இடையில் மாறி மாறி நடந்த தாக்குதலில், பல்லாயிரம் கணக்கான பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்கள் உயிரிழந்தனர். மேலும், உலக நாடுகளிடையே போர் பதற்றமும் அதிகரிக்கத் தொடங்கியது. ஐ.நா சபையிலும் இது குறித்த சர்ச்சைகளுக்கு இஸ்ரேல் கண்டுக்காமல் தொடர் தாக்குதல் நடத்தி வந்தது.
இதனால், போர் பதற்றம் மேலும் அதிகரித்த சூழலில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் எடுத்த முயற்சியின் பலனாக இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த ஒப்பந்தம் கடந்த நவ.-27-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த நிலையில், லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தி இருக்கிறது.
இதற்கு காரணமாக இஸ்ரேல் கூறுவது என்னவென்றால், ‘ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்த தயாராக இருந்ததாகவும் அதனை எதிர்த்து தாக்குதல் நடத்தவே தாக்குதல் நடத்தினோம்’ என கூறியுள்ளனர்.
ஆனால் இதை ஹிஸ்புல்லா அமைப்பினர் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். மேலும், இஸ்ரேல் வேண்டுமென்றே போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் என குற்றம் சாட்டியு இருக்கின்றனர்.