இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற ஹமாஸ் குழுவினர் மீது இஸ்ரேல் துப்பாக்கிசூடு..!

Isrel

தென்மேற்கு பாலஸ்தீன பகுதியான காசாவில் இருந்து 5,000 பாலஸ்தீன ராக்கெட்டுகள் மூலம், மத்திய கிழக்கில் உள்ள நாடான இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அங்கு போர் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு இஸ்லாமிய இயக்கமான ஹமாஸ் ஆட்சியை கைப்பற்றிய பின்னர் காசா மீது இஸ்ரேல் முற்றுகையைத் தொடங்கியது.

காசா பகுதி தங்களுடையது எனக் கூறி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனைகள் நடந்து வந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு நாடுகளுக்கும் இடையே இதுவரை நான்கு முறை போர் நடந்துள்ளது.

இந்த நிலையில்,  காசா பகுதி வழியாக பாலஸ்தீன தீவிரவாதிகள் இஸ்ரேலுக்குள் ஊடுருவி, காசாவின் பல இடங்களில் இருந்து சுமார் 5,000 ராக்கெட்டுகள் சரமாரியாக ஏவியுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளது.

இந்த போரை தொடர்ந்து, இஸ்ரேல் போர் நிலையை அறிவித்து, மக்களை வீடுகளுக்குள் இருக்குமாறு  வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க போவதாக ஹமாஸ் குழுவினர் போர் பிரகடனம் செய்துள்ள நிலையில், இஸ்ரேலுக்குள் நுழைய முயன்ற ஹமாஸ் குழுவினர் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர்.

இஸ்ரேலை குறி வைத்து ஹமாஸ் குழுவினர் தாக்குதல் நடத்திய நிலையில் இஸ்ரவேல் ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். ‘Operation Iron Sword’ என்ற பெயரில், பதுங்கியிருந்த ஹமாஸ் குழுவினர் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. காஸாவை நோக்கி இஸ்ரேல் ராணுவ படைகள் முன்னேறி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்