ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதல்… அதிகாலை நடந்த பரபரப்பு சம்பவம்!

Israel attack

Iran Israel Conflict: ஈரான் நாட்டின் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் – ஈரான் இடையே கடந்த சில நாட்களாக போர் பதற்றம் நிலவி வருகிறது. நீண்ட காலமாக ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுவுக்கும் இஸ்ரேலுக்கு தாக்குதல் சம்பவம் நடந்து வருகிறது. ஆனால், இஸ்ரேல் மீது ஈரான் நேரடி தாக்குதல் நடத்தாமல் இருந்து வந்தது. இந்த சூழலில் இம்மாதம் தொடக்கத்தில் ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த ஈரானுக்கு பெரும் கோபத்தை உண்டாக்கியது.

இந்த தாக்குதலில் ஈரானின் புரட்சிப்படை தளபதி உட்பட 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஈரான், கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது முதல்முறையாக சரமாரியாக ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலை நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவி வருகிறது.

இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டங்களை பதிவு செய்து ஈரான் மீது பொருளாதார தடையும் விதித்தது. அதுமட்டுமில்லாமல், ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் முடிவு செய்தது. இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால்  நாங்கள் தாக்குதல் நடத்துவோம் என ஈரான் கூறியிருந்தது.

இந்த நிலையில், இன்று அதிகாலை ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. அதாவது, ஈரானின் இஸ்பஹான் நகரில் உள்ள விமானப்படை தளத்தில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியிள்ளது. ஆனால், இந்த தாக்குதல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும் ஈரான் மீது இஸ்ரேல் நடத்தியதாக கூறப்படும் தாக்குதலை அமெரிக்கா உறுதி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்