Video: ஹமாஸ் எல்லைக்குள் புகுந்து அதிரடி காட்டிய இஸ்ரேல்! 250 பிணைய கைதிகள் உயிருடன் மீட்பு.!

hostages

இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகள், காசா நகரின் ஹமாஸ் பதுங்கு குழியில், வைக்கப்பட்டிருந்த 250க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை அதிரடியாக சண்டையிட்டு மீட்கும் காட்சிகளை வெளியிட்டுள்ளது.

ஹாமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது போர் தொடுத்ததை தொடர்ந்து, இஸ்ரேலும் பதில் தாக்குதலை தொடர்ந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் பாலஸ்தீன பகுதியான காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

இன்று, இஸ்ரேல்-ஹமாஸ் போரின் ஏழாவது நாளைக் குறிக்கிறது. போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலில் 1,200 பேரும் காசா பகுதியில் 1,300 பேரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, காசாவை தொடர்ந்து இஸ்ரேல் தாக்குதல் நடத்திவரும் நிலையில், காசா நகரில் மின்உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

ஆபரேஷன் அஜய் : இஸ்ரேலில் இருந்து பத்திரமாக டெல்லி வந்தடைந்த 212 இந்தியர்கள்.!

காசா நகரில் லட்சக்கணக்கான மக்கள் உணவு, குடிநீர், மின்சாரம் இல்லாமல் தவித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், நேற்றைய தினம் ஹமாஸ் அமைப்பினர் பிடித்துவைத்துள்ள 100க்கும் மேற்பட்ட பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை, காசா நகரத்திற்கு மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிபொருள் எதுவும் வழங்கப்படாது என்றும் இஸ்ரேல் அறிவித்தது.

பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால் தண்ணீர், மின்சாரம் கிடையாது – இஸ்ரேல் அறிவிப்பு!

இந்நிலையில், நாங்களே களத்தில் இறங்குகிறோம் என்பது போல், இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகள் அதிரடியாக காசா நகரின் ஹமாஸ் பதுங்கு குழியில் புகுந்து, 250 இஸ்ரேல் பணயக்கைதிகளை மீட்டுள்ளது. இஸ்ரேலின் இராணுவத்தின் இந்த அதிரடி தாக்குதலில் 60 ஹமாஸ் பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர் என்றும் ஹமாஸ் தெற்கு கடற்படைப் பிரிவின் துணைத் தளபதி முஹம்மது அபு அலி உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டனர் எனவும் தெரிவித்து இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்க “ஆபரேசன் அஜய்” எனும் திட்டத்தை நேற்று முன் தினம் அறிவித்தது மத்திய அரசு. அதன்படி, முன்பதிவு செய்து இருந்த 212 இந்தியர்கள் நேற்று இரவு சிறப்பு விமானம் மூலம் இஸ்ரேலில் உள்ள பென் குரியன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, இன்று அதிகாலை டெல்லி வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்