Israel Hamas War : இஸ்ரேல் ஹமாஸ் போர் என்பது கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் தொடங்கி தற்போது வரை தாக்குதல்கள் தொடர்கின்றன. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1200 பேர் உயிரிழந்தனர். காசா நகரில் மட்டும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது இந்த தாக்குதல்கள் முன்பை விட குறைந்தாலும், முழுதாக தாக்குதல்கள் குறையவில்லை.
பல்வேறு உலக நாடுகள் , காசா நகர் மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருந்தும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு , காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக அழிக்கும் வரையில் தாக்குதல்களை நிறுத்தப்போவதில்லை என கூறி வருகிறார்.
இந்நிலையில், முதலில் இஸ்ரேல் ராணுவம் காசா நகர் வடக்கு பகுதியில் இருந்து தாக்குதல்களை தொடர்ந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள பாலஸ்தீனிய குடிமக்கள் தெற்கு நோக்கி சென்றனர். முதலில் என்கிளேவின் நடுப்பகுதிக்கு இடம்பெயர்ந்த காசா நகர் மக்கள், அடுத்து தெற்கு நகரமான கான் யூனிஸுக்கு சென்று, இறுதியில் எகிப்திய எல்லையில் அமைந்துள்ள ரஃபா நகருக்கு சென்றனர்.
ரஃபா நகரில் முதலில் இருந்த மக்கள் தொகை அளவு 3 லட்சம் அளவில் மட்டுமே இருந்துள்ளது. அனால் தற்போது பலர் இடம் பெயர்ந்து உள்ளதால் அங்கு தற்போது மக்கள் தொகை 15 லட்சமாக உயர்ந்துள்ளது. இப்படியான சூழலில் தான் ரஃபா மீது படையெடுப்பதற்கு இஸ்ரேல் ராணுவம் தற்போது ஆயத்தமாகி வருகிறது.
இந்த நடவடிக்கைக்கு எதிராக தற்போது அமெரிக்கா எதிர்ப்பு குரலை பலமாக பதிவு செய்து வருகிறது. ஹமாஸை அழிக்க இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவி செய்யும். ஆனால், மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கும் ரஃபா நகரின் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் திட்டமிட்டு இருப்பது அங்கு மேலும் பதற்றத்தை உண்டு செய்யும் என கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் நேற்று (திங்கள்) அமெரிக்க செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜனாதிபதி ஜோ பிடன் ஹமாஸை தோற்கடிக்கும் முயற்சியில் இஸ்ரேலுக்கு உறுதுணையாக இருக்கிறார். ஆனால், ரஃபா மீதான தாக்குதலை இஸ்ரேலின் “தவறு” என்று குறிப்பிடுகிறார் என சல்லிவன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், இஸ்ரேலின் இந்த நடவடிக்கை இன்னும் பல அப்பாவி பொதுமக்களின் மரணத்திற்கு வழிவகுக்கும். ஏற்கனவே கடுமையான மனித இழப்புகளை சந்தித்து வரும் காசா நகரம் இன்னும் கூடுதல் இழப்புகளை சந்திக்கும். காஸாவில் ராணுவ ஆதிக்கத்தை இது ஆழமாக்கும் மற்றும் சர்வதேச அளவில் இஸ்ரேலை மேலும் தனிமைப்படுத்தும்.
காசாவின் மற்ற முக்கிய நகரங்கள் பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டன. ரஃபா நகர் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட இஸ்ரேல், அந்த குடிமக்களை எப்படி, எங்கு பாதுகாப்பாக நகர்த்துவது என்ற திட்டத்தை இன்னும் வகுக்கவில்லை. அவர்களுக்கு உணவளிக்கவும், வீடுகளை வழங்கவும், சுகாதாரம் போன்ற அடிப்படை விஷயங்களை அணுகுவதை பற்றியும் இன்னும் திட்டமிடவில்லை. ஐரோப்பாவில் உள்ள இஸ்ரேலின் நட்பு நாடுகள் கூட காசா நகர் ரஃபாவை தாக்குவதற்கு எதிராக இஸ்ரேலை எச்சரித்துள்ளன.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…