கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 57 வது நாளான இன்றும் நடைபெற்று வந்தது. இந்த போரில் முதலில் ஹாமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் சுமார் 1400 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், பதிலுக்கு இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகரில் நடத்திய தாக்குதல் 14 ஆயிரம் பேர் உயிரிழந்தனர் என தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த தாக்குதலால் பொதுமக்கள், குறிப்பாக காசா நகரத்து பாலஸ்தீன மக்கள், பெண்கள், குழந்தைகள் அதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இரு தரப்பும் போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு நாடுகள் வலியுறுத்தியது.இறுதியில் அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாட்டின் மத்தியஸ்தலத்தை அடுத்து 7 நாட்கள் போர் நிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது. இந்த போர் நிறுத்தத்தின் முக்கிய நோக்கமே, இரு தரப்பில் இருந்தும் பிணை கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பது தான்.
அதன்படி, இதுவரை 110 இஸ்ரேல் பிணை கைதிகளை ஹமாஸ் அமைப்பினரும், 240 பிணை கைதிகளை இஸ்ரேல் ராணுவமும் விடுதலை செய்துள்ளது. இதில் குறிப்பாக, நாளொன்றுக்கு 10 பிணை கைதிகளை விடுவிப்பதாக தான் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் ஹமாஸ் அமைப்பினர் அதனை மீறி 8 பேரை மட்டுமே விடுவித்ததக குற்றம் சாட்டி இருந்தது.
இந்தியாவில் ஆண்டுதோறும் 2 மில்லியனுக்கும் அதிகமான இறப்புகள்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
இந்த சூழலில், நேற்று காசா நகர் மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் தாக்குதலை நடத்தி கொண்டு மழைகளை பொழிந்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பும் இஸ்ரேல் ராணுவம் மீது தாக்குதல் நடத்தியது. அதுமட்டுமில்லாமல், வான்வெளி தாக்குதலை தொடர்ந்து தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் ராணுவம் தொடங்கியதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒரு வார கால போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இன்று அதிகாலை முதல் நடந்த தாக்குதலில் காசாவில் 178 பேர் கொல்லப்பட்டனர். இதனால், ஹமாஸ் அமைப்பினர் மீண்டும் இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இன்று அதிகாலை டமாஸ்கஸின் புறநகரில் பல இடங்கள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியாக சிரிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள சிரிய கோலன் குன்றுகளின் திசையில் இருந்து தாக்குதல்கள் நடந்ததாக கூறப்படுகிறது. மேலும், காசாவில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததில் இருந்து, இதுவரை 400க்கும் மேற்பட்ட பயங்கரவாத இடங்களை குறிவைத்து தாக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…