Categories: உலகம்

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: ஹிஸ்புல்லா தாக்குதலில் இந்திய வம்சாவளி ராணுவ வீரர் காயம்!

Published by
கெளதம்

ஹமாஸை ஆதரிக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மணிப்பூர் ராணுவ வீரர் காயமடைந்துள்ளார்.

கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான குண்டுகளை வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டனர். அன்றில் இருந்து  இன்று வரை இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே யுத்தம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் – பாலஸ்தீன போர் தொடர்ந்து வருகிறது. இந்த போரில் இருநாடுகளிலும் 5000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது, இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராணுவ வீரர், படு காயமடைந்துள்ளார்.

மணிப்பூரின் லம்கா (சுராசந்த்பூர்) மாவட்டத்தில் பிறந்த நடனெல் டூதாங் என்பவர், லெபனானைச் சேர்ந்த பயங்கரவாதக் குழுவான ஹிஸ்புல்லாவால் வீசப்பட்ட ஷெல் தாக்குதலால் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் அவருக்கு கண் மற்றும் கையில் காயம் ஏற்பட்டது.

காசா மருத்துவமனைகள் சேதம் – பாலஸ்தீன சுகாதார அமைச்சகம்!

அக்டோபர் 18 அன்று நடைபெற்ற அந்த தாக்குதலில் காயங்களால் பாதிக்கப்பட்டு ஹைஃபாவில் உள்ள ரம்பம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மணிப்பூர் மற்றும் மிசோரமைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட யூதர்கள் இஸ்ரேலிய இராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்தியாவில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.! கனடா வெளியிட்ட புதிய அறிவிப்பு.!

இதற்கிடையில், பாலஸ்தீனிய காரணத்தை ஆதரிக்கும் லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸுக்கு ஆதரவு தெரிவித்து போரில் ஈடுபட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலுக்குள் ஊடுருவி நூற்றுக்கணக்கானவர்களை கொன்று குவித்த பின்னர், இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து ஹமாஸுடனான இணைந்து ஹிஸ்புல்லா ஷெல் தாக்குதலைத்  நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Published by
கெளதம்

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

13 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

14 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

14 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

15 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

15 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

16 hours ago