இஸ்ரேல்-ஹமாஸ் போர்: ஹிஸ்புல்லா தாக்குதலில் இந்திய வம்சாவளி ராணுவ வீரர் காயம்!
ஹமாஸை ஆதரிக்கும் ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மணிப்பூர் ராணுவ வீரர் காயமடைந்துள்ளார்.
கடந்த 7ம் தேதி இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான குண்டுகளை வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதலில் ஈடுபட்டனர். அன்றில் இருந்து இன்று வரை இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே யுத்தம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் – பாலஸ்தீன போர் தொடர்ந்து வருகிறது. இந்த போரில் இருநாடுகளிலும் 5000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது, இஸ்ரேல்-ஹமாஸ் போரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராணுவ வீரர், படு காயமடைந்துள்ளார்.
மணிப்பூரின் லம்கா (சுராசந்த்பூர்) மாவட்டத்தில் பிறந்த நடனெல் டூதாங் என்பவர், லெபனானைச் சேர்ந்த பயங்கரவாதக் குழுவான ஹிஸ்புல்லாவால் வீசப்பட்ட ஷெல் தாக்குதலால் தாக்கப்பட்டார். இந்த தாக்குதலில் அவருக்கு கண் மற்றும் கையில் காயம் ஏற்பட்டது.
காசா மருத்துவமனைகள் சேதம் – பாலஸ்தீன சுகாதார அமைச்சகம்!
அக்டோபர் 18 அன்று நடைபெற்ற அந்த தாக்குதலில் காயங்களால் பாதிக்கப்பட்டு ஹைஃபாவில் உள்ள ரம்பம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மணிப்பூர் மற்றும் மிசோரமைச் சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட யூதர்கள் இஸ்ரேலிய இராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்தியாவில் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.! கனடா வெளியிட்ட புதிய அறிவிப்பு.!
இதற்கிடையில், பாலஸ்தீனிய காரணத்தை ஆதரிக்கும் லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸுக்கு ஆதரவு தெரிவித்து போரில் ஈடுபட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேலுக்குள் ஊடுருவி நூற்றுக்கணக்கானவர்களை கொன்று குவித்த பின்னர், இஸ்ரேல் போர் தொடங்கியதில் இருந்து ஹமாஸுடனான இணைந்து ஹிஸ்புல்லா ஷெல் தாக்குதலைத் நடத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.