இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்: இசை நிகழ்ச்சியில் பயங்கர தாக்குதலில் 260 பேர் பலி!
இஸ்ரேலின் காசா நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியை குறிவைத்து ஹமாஸ் குழுவினர் நடத்திய தாக்குதலில் சுமார் 260 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த மூன்று நாட்களாக ஹமாஸ் குழுவினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே வெடித்த மோதலில் இரு பிரிவினரையும் சேர்த்து பலி எண்ணிக்கை 1000-ஐ கடந்துள்ளது. தொடர் தாக்குதலால் காசா நகரம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில், காசாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றை குறிவைத்து ஹமாஸ் குழுவினர், கொடூர தாக்குதலை நடத்தியுள்ளது. இஸ்ரேலின் காசா நகரில் உள்ள நெகேவ் பகுதியில் பெரிய அளவிலான புத்தர் சிலையின் கீழ், உற்சாகமாக நடனமாடி கொண்டிருந்தவர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இந்த தாக்குதலில் 260 பேர் உயிரிழந்தனர் என்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, இணையத்தில் பரவும் வீடியோவில், நிகழ்ச்சியில் உள்ளவர்கள் பதற்றமாக ஓடுவதையும், தாக்குதலைத் தொடர்ந்து வாகனங்களில் அணிவகுத்து நிற்பதையும் காண்பிக்கிறது.
மேலும், இதில் உயிரிழந்தவர்களில் சிலர் வெளிநாட்டினர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் பலர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையில், நேற்று முன்தினம் ஹமாஸ் குழுவினர் இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளை ஏவி சரமாரியாக தாக்கியது. அது மட்டும் இல்லாமல் நேற்று காசா நகர தெருக்களில் பொதுமக்களை சுட்டுக் கொன்று குவித்துள்ளன. காசா நகர வீடுகளில் புகுந்து 100க்கும் மேற்பட்டவர்களை துப்பாக்கி முனையில் பிணைக் கைதிகளாக வைத்துள்ளனர்.