இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்.! ஐ.நா வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா.! 

Israel Hamas war UN voting

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் அக்டோபர் 7ஆம் தேதி துவங்கி, 20 நாட்களை கடந்து இன்னும் தொடர்ந்து வருகிறது. இதுவரை சுமார் 7000 மக்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் பாலஸ்தீன நாட்டின் காசா பகுதியில் தான் இஸ்ரேல் – ஹமாஸ் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால், காசா நகரில் இருக்கும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளான உணவு, தங்குமிடம் , மருத்துவ உதவிகள் கிடைக்கப்பெறாமல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்த வேண்டும் என பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகிறது. இந்த போர் நிறுத்தம் தொடர்பாக  உலக நாடுகளின் கூட்டமைப்பான ஐநாவில் வாக்கெடுப்புகள் நடத்தப்படுகிறது. ஐநாவின் 10வது அவசரகால சிறப்பு அமர்வில் அரபு நாடுகளின் சார்பாக ஜோர்டானின் ஐநா தூதர் மஹ்மூத் ஹமூத் போர் நிறுத்த வரைவு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

ஹமாஸ் விமானப்படை தளபதி உயிரிழந்தார்.! இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு.!

காசாவில் நடைபெறும் இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையிலான போரை உடனடியாக நிறுத்த வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். மனிதாபிமான அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்.

தண்ணீர், உணவு, மருத்துவப் பொருட்கள், எரிபொருள் மற்றும் மின்சாரம் உட்பட, காசா பகுதி முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் உடனடியாக  தடையின்றி கிடைக்க வேண்டும் என ஜோர்டான் நாட்டின் சார்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

மொத்தம் 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா அமைப்பில், 120 நாடுகள் ஜோர்டன் தீர்மானத்திற்கு ஆதரவாகவும், 14 நாடுகள் எதிராகவும், 45 நாடுகள் வாக்களிக்காமலும் இருந்தனர்.

இந்தியா இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. ஜோர்டர்ன் கொண்டு வந்த தீர்மானத்தில் ஹமாஸ் அமைப்பினர் பற்றி சரிவர குறிப்பிடப்படவில்லை என்று கூறி வாக்களிக்கவில்லை. இந்தியாவை தவிர, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், உக்ரைன் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளும் வாக்களிக்கவில்லை.

இதற்கு முன்னதாக கனடாவால் முன்மொழியப்பட்ட  தீர்மானத்தில் ஒரு பகுதியை சேர்க்குமாறு பல்வேறு நாடுகள் சார்பில் கோரப்பட்டது, கனடா கொண்டு வந்த தீர்மானத்தில், “அக்டோபர் 7, 2023 இல் தொடங்கி, இஸ்ரேலில் நடந்த ஹமாஸின் பயங்கரவாதத் தாக்குதல்களையும், பணயக்கைதிகளை பிடித்து வைத்து கொல்லப்படுவதையும் கண்டிக்கிறது. காசா மக்களின் பாதுகாப்பு கிடைக்க வேண்டும். பணயக்கைதிகளின் நிபந்தனையற்ற உடனடி விடுதலைக்கும் கனடா தீர்மானம் மூலம்  அழைப்பு விடுக்கபட்டது.

அதற்கு இந்தியா உள்ளிட்ட 87 நாடுகளுடன் இணைந்து ஆதரவாகவும் ,  55 உறுப்பு நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. மற்றும் 23 நாடுகள் வாக்களிக்கவில்லை. மூன்றில் இரண்டு பங்கு உறுப்பு நாடுகள் ஆதரவாக வாக்களித்தால் மட்டுமே,  வரைவு தீர்மானம் ஐநா  விவாதத்திற்கு ஏற்கப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்