நீடிக்கும் போர் நிறுத்தம்… 30 பாலஸ்தீன கைதிகள், 12 இஸ்ரேல் பிணைக் கைதிகள் விடுவிப்பு.!
கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி துவங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர் 50 நாட்களை கடந்து நடைபெற்று வந்தது. இந்த போரின் விளைவாக இஸ்ரேல் தரப்பில் 1200 பேர் உயிரிழந்தனர். 240 பேர் பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினரால் கொண்டு செல்லப்பட்டனர்.
அதே போல, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரையில் 14 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் நீட்டிப்பு.! அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரவேற்பு.!
இஸ்ரேல் ஹமாஸ் போரை நிறுத்த கோரி பல்வேறு நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அமெரிக்கா, எகிப்து , கத்தார் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தலம் செய்த பிறகு 4 நாட்கள் போரை நிறுத்தி இரு தரப்பில் இருந்தும் குறிப்பிட்ட அளவில் பிணைக் கைதிகளை விடுவிக்க போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி குறிப்பிட்ட அளவிலான பிணை கைதிகள் இருதரப்பில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த 4 நாட்கள் போர் நிறுத்தம், கத்தாரின் மத்தியஸ்தலத்தை அடுத்து, மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இதில் 5ஆம் நாளான நேற்று 12 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். இதில் 9 பெண்கள் ஒரு சிறுமி என 10 இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பிணைக் கைதிகளும், 2 தாய்லாந்து நாட்டவர்களும் விடுவிக்கப்பட்டனர்.
இஸ்ரேல் பிணை கைதிகள் காசா – எகிப்து எல்லையில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதே போல, இஸ்ரேல் தரப்பில் இருந்து, 30 பாலஸ்தீனியர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமைக்கு முன்னர், இஸ்ரேல் பிணைக் கைதிகள் 50 பேர் விடுவிக்கப்பட்டு இருந்தனர். பாலஸ்தீனிய சிறை கைதிகள் 150 பேர் விடுவிக்கப்பட்டு இருந்தனர். நேற்றைய விடுவிப்புக்கு பின்னர் இந்த எண்ணிக்கை கூடியுள்ளது.