Categories: உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ்தாக்குதல்.! 29 ஐநா ஊழியர்கள் உயிரிழப்பு.!

Published by
மணிகண்டன்

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த அக்டோபர் 7ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னர் , ஹமாஸ் அமைப்பினர் அதிகம் வசிக்கும் காசாவில்  இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. 17வது நாளாக இந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது.

இந்த தாக்குதல் காரணமாக, அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது காஸாவில் வசித்து வரும் பாலஸ்தீன மக்கள் தான். தற்போது காசா பகுதியில் வசிக்கும் மக்கள், உணவு தண்ணீர், மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர்: காஸாவில் 1688 குழந்தைகள் உயிரிழப்பு.! பாலஸ்தீன வெளியுறவுத்துறை தகவல்..!

இதுவரை இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே  நடந்த தாக்குதலில் சுமார் 3 ஆயிரம் மக்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. காஸாவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மக்களை காசா எல்லைகளில் உள்ள முகாம்களில் வெளியேற்றும் முயற்சியிலும், அங்குள்ள மக்களுக்கு அத்தியாவசிய உதவிகளை செய்யும் முயற்சியிலும் ஐநா ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஐநா நேற்று ஓர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. அதில் இதுவரை 29 ஐநா ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து ஐநா கூறுகையில், நாங்கள் அதிர்ச்சியிலும் துக்கத்திலும் இருக்கிறோம். அக்டோபர் 7 முதல் காசாவில் எங்கள் ஊழியர்கள் 29 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. என ஐநா தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும்,  காசா நகரில் கிட்டத்தட்ட 180 ஐநா ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். 38 ஐநா நிறுவல்கள் (அலுவலகம்) சேதமடைந்துள்ளன என்றும், காஸாவில் எரிபொருள் விநியோகம் இன்னும் மூன்று நாட்களில் தீர்ந்துவிடும் என்றும் எச்சரித்துள்ளது.

எரிபொருள் இல்லாமல், தண்ணீர் இருக்காது, மருத்துவமனைகள் செயல்படாது. உணவு தயாரிக்க பேக்கரிகள் இயங்காது. எரிபொருள் இல்லாமல் பொதுமக்களுக்கு உதவிகள் சென்றடையாது என்றும் ஐநா தகவல் தெரிவித்துள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!

ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…

5 hours ago
‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

‘முடிவெடுப்பது நான் அல்ல’.., ஒருவழியாக ஓய்வு குறித்து மௌனம் கலைத்த தோனி.!

சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…

5 hours ago
டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

டார்கெட் முடிக்காத ஊழியர்கள்… நாயை போல் அலைய வைத்து கொடுமைப்படுத்திய தனியார் நிறுவனம்.!

கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…

6 hours ago

“அவர்களுக்கு அழ மட்டுமே தெரியும்”.., யாரை சொல்கிறார் பிரதமர் மோடி.?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார்.  பாம்பனில் கடலுக்கு நடுவே…

7 hours ago

திறப்பு விழா அன்றே பழுது..! பிரதமர் மோடி திறந்து வைத்த பாம்பன் பாலத்தின் தற்போதைய நிலை என்ன?

ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…

8 hours ago

உருவாகிறது காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இந்த 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.!

சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…

10 hours ago