பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட அமைப்பான ஹமாஸ் அமைப்பு இம்மாதம் கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரல் ராணுவம் தற்போது வரை காசா நகர் மீது வான்வழி தாக்குதலை தொடர்ந்து வந்த நிலையில், தற்போது தரைவழி தாக்குதலை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, வடக்கு காசாவுக்குள் நுழைந்து டாங்கிகள் மூலம் இஸ்ரேல் ராணுவம் இரவில் தாக்குதல் நடத்தி வருவதாகவும், ஹமாஸின் முக்கிய இடங்களை குறிவைத்து தரைவழி தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. பின்னர், ஹமாஸ் நிலைகள் மீது தரைவழி தாக்குதலை முடித்துவிட்டு இஸ்ரேல் ராணுவம் திரும்பியதாகவும் அறிவித்துள்ளது.
முன்னதாக, தரைவழி தாக்குதலை தொடங்கவுள்ளதாக இஸ்ரேல் அறிவித்திருந்தாலும், தாக்குதலில் ஈடுபட தாமதமாகியது. இதற்கு ஒரு காரணம் அமெரிக்கா எனவும், அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று தரைவழி தாக்குதலை தாமதமாக்கியதாக சொல்லப்படுகிறது.
ஆனால், நேற்று தான் முதல் முறையாக தரைவழியாக கசாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் ஊடுருவியதாக தாக்குதல் நடத்தப்பட்ட வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளது. தொடர்ந்து 20வது நாளாக இஸ்ரேல், காசா மீதான வான்வெளி மற்றும் தரைவழி தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், ஹமாஸ்-இஸ்ரேல் இடையேயான போரில் காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,000-ஐ கடந்ததாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 15,000-க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளனர், இதில் 2,055 குழந்தைகள் மற்றும் 1,119 பெண்கள் அடங்குவர்.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…