Categories: உலகம்

இஸ்ரேல் பாதுகாப்புப் படை தாக்குதல்.. ஹமாஸின் 150 பதுங்கு குழிகள் அழிப்பு! பயங்கரவாதிகள் சுட்டு கொலை!

Published by
பாலா கலியமூர்த்தி

கடந்த 7ஆம் தேதி தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான யுத்தம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இருதரப்பும் போரை  நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் தாக்குதல் அதிகரித்து வருவதால் பதற்றமான சூழலே நிலவி வருகிறது. குறிப்பாக ஹமாஸ் அமைப்பினர் அதிகம் வசிக்கும் பாலஸ்தீனிய நாட்டின் காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.

வான்வெளி தாக்குதலை தொடர்ந்து, தரைவழி தாக்குதலையும் இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் பரபரப்பாக காணப்படுகிறது இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் தாக்குதல் நடத்தி கொல்லப்பட்ட நிலையில், ஹமாஸ் அமைப்பின் விமானப்படை தளபதியும் இஸ்ரேல் விமானப்படை தாக்குதலில் உயிரிழந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், இதுவரை சுமார் 7000 மக்கள் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியிருந்தது.

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்.! ஐ.நா வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா.!

இந்தநிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் இரவு முழுவதும் தாக்குதலில் ஈடுபடத்தில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் 150 பதுங்கு குழிகளை அழித்துள்ளது. காசா பகுதியில் ஒரே இரவில் தரைவழி நடவடிக்கையில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கும் (ஐடிஎஃப்) ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதில், இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் போர் விமானங்கள் இரவு வடக்கு காசா பகுதியில் சுமார் 150 ஹமாஸ் அமைப்பின் பதுங்கு குழிகளை குறிவைத்து தாக்கி அழித்துள்ளது.

மேலும், இந்த தாக்குதலின் போது, ஹமாஸ் பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாகவும், எதிரிகளின் சுரங்கங்கள், நிலத்துக்கு அடியில் இருக்கும் பதுங்கு குழிகள் மற்றும் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இருப்பினும், இஸ்ரேல் தாக்குதல்களால் இன்டர்நெட் மற்றும் தொலைபேசி சேவைகள் பாதிப்பால் காசாவில் இருந்து பாலஸ்தீனம் சார்ந்த அறிக்கைகள் எதுவும் வரவில்லை என கூறபடுகிறது.

எனினும், இஸ்ரேல் பாதுகாப்பு படையின் தீவிர தாக்குதல்களால் இரவு முழுவதும் காசா எல்லை பகுதிய அருகே, அதிக அளவில் வெடிகுண்டு சத்தம், பெரிய ரக துப்பாக்கிகளின் தொடர்ச்சியான சத்தம், போர் விமானங்களின் தாக்குதல் சத்தம் ஆகியவை கேட்டு கொண்டே இருந்ததாகவும் கூறப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

1 hour ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

2 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

4 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

6 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

6 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

7 hours ago