சிரியா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்.! வான்வெளி வெடிபொருள் பரிமாற்றம்.?
முன்னதாகே இஸ்ரேல் ராணுவம், சிரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ராணுவ ஆயுத கிடங்கு மற்றும் பாதுகாப்பு ரேடார் நோக்கி தாக்குதல் நடத்தியதில் 8 சிரியா ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு சிரியா கண்டனம் தெரிவித்தது .
ஆனால் மேற்கண்ட தாக்குதலை அடுத்து டேரா மற்றும் அலப்போ விமான நிலையத்தில் இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதில் அலப்போ விமான நிலையம் கடந்த 2 வாரங்களில் மட்டும் 4 முறை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
இன்றுவரை ஹமாஸ் மீதான தாக்குதலுக்கு ரூ.37,350 கோடி செலவு.! இஸ்ரேல் நிதியமைச்சர் தகவல்.!
இந்த தாக்குதலானது, மத்திய கடற்கரை பகுதியில் இருந்து இஸ்ரேல், தனது போர் விமானம் மூலம் 2 ஏவுகணைகளை விமான நிலையம் மீது வீசியுள்ளது. இதில் முழுதாக சேதமடைந்த அலப்போ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
ஏன் குறிவைத்து சிரியா விமான நிலையங்கள் தாக்கப்படுவது என்றால், ஈரான் பகுதிகளில் இருந்து வெடிபொருட்களை சிரியா விமான நிலையம் மூலம் தான் பற்றிமாற்றம் செய்கிறதாம். இதன் காரணமாக தான் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் இருக்கும் சிரியா மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே, பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் காசா நகரில் இஸ்ரேல் ராணுவம் 18வது நாளாக தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.