Israel Hamas: மேற்கு ஆசியாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான வன்முறை மோதல்கள் தொடர்கின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய மோதலில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த மோதல் காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது காஸாவில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது.
இந்நிலையில், நேற்று ( பிப்ரவரி 29) மாலை பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து பாலஸ்தீன சுகாதார அதிகாரிகளின் கூறுகையில், நேற்று (வியாழன்) காசாவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கி கொண்டு இருந்தோம்.
அப்போது பாலஸ்தீனியர்கள் மக்கள் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 104 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காசாவில் குழந்தைகள் பட்டினியால் இறந்து வருவதாகவும், பிப்ரவரி 29 அன்று 4 குழந்தைகள் பசியால் இறந்ததாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்துக்குப் பிறகு, இஸ்ரேல் ராணுவத்துக்கு உலகம் முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் சமூக ஊடகமான எக்ஸ் பக்கத்தில் “காசாவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களை நான் வன்மையாக கண்டிப்பதோடு, உண்மை, நீதி மற்றும் சர்வதேச சட்டத்தை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். “காசாவின் நிலைமை பேரழிவு தருகிறது.
அனைத்து பொதுமக்களும் பாதுகாக்கப்பட வேண்டும். மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு உடனடியாக போர் நிறுத்தம் விதிக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…