காசாவில் உதவிக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்..104 பேர் உயிரிழப்பு..!

gaza

Israel Hamas: மேற்கு ஆசியாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான வன்முறை மோதல்கள் தொடர்கின்றன. கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கிய மோதலில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த மோதல் காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது காஸாவில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது.

READ MORE-கனடா முன்னாள் பிரதமர் பிரையன் முல்ரோனி காலமானார்..!

இந்நிலையில், நேற்று ( பிப்ரவரி 29) மாலை பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில், 700-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதுகுறித்து பாலஸ்தீன சுகாதார அதிகாரிகளின் கூறுகையில், நேற்று (வியாழன்) காசாவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்கி கொண்டு இருந்தோம்.

அப்போது பாலஸ்தீனியர்கள் மக்கள் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 104 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காசாவில் குழந்தைகள் பட்டினியால் இறந்து வருவதாகவும், பிப்ரவரி 29 அன்று 4 குழந்தைகள் பசியால் இறந்ததாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

READ MORE- வங்கதேச தீ விபத்து.! சமையல் எரிவாயுவால் 7 மாடிகளுக்கு பரவிய தீ.! 44 பேர் உயிரிழப்பு.!

இச்சம்பவத்துக்குப் பிறகு, இஸ்ரேல் ராணுவத்துக்கு உலகம் முழுவதும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் சமூக ஊடகமான எக்ஸ் பக்கத்தில்  “காசாவில் நடந்த  துப்பாக்கிச்சூடு சம்பவங்களை நான் வன்மையாக கண்டிப்பதோடு, உண்மை, நீதி மற்றும் சர்வதேச சட்டத்தை மதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். “காசாவின் நிலைமை பேரழிவு தருகிறது.

அனைத்து பொதுமக்களும் பாதுகாக்கப்பட வேண்டும். மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு உடனடியாக போர் நிறுத்தம் விதிக்கப்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்