கடந்த 24 மணி நேரத்தில் காசா பகுதியில் பெரிய அளவிலான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும், சுரங்கப்பாதைகள், பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் உட்பட சுமார் 450 ஹமாஸ் இலக்குகளைத் தாக்கியதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) கூறியுள்ளது. இது தவிர, ஹமாஸ் இராணுவ வசதிகள், கண்காணிப்பு நிலையங்கள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்களையும், காசாவிற்குள் ஹமாஸ் இராணுவ வளாகத்தை கைப்பற்றப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளது.
அதில் கண்காணிப்பு நிலைகள், ஹமாஸ் செயற்பாட்டாளர்களுக்கான பயிற்சி வசதிகள் மற்றும் நிலத்தடி சுரங்கங்கள் ஆகியவை அடங்கும் எனவும் கூறப்படுகிறது. ஒரே இரவில், காசா பகுதியில் உள்ள ஹமாஸ் இராணுவ வளாகத்தை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளன. ஹமாஸ் தீவிரவாதிகளின் 450 இலக்குகளை அழித்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருக்கிறது.
இஸ்ரேல் தனது காசா தாக்குதலை ஹமாஸின் உள்கட்டமைப்பைக் குறிவைத்து ஒட்டுமொத்த பயங்கரவாதக் குழுவையும் ஒழிக்கும் நோக்கத்துடன் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் இராணுவப் படைகளின் செய்தித்தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கூறுகையில், முக்கியமான இடங்களில் தாக்குதல்களை தொடர்கிறோம். நாங்கள் காசா முனைப் பகுதியை முற்றிலுமாக சுற்றி வளைத்து விட்டோம். கடந்த அக்டோபர் 7 அன்று இஸ்ரேலில் 1,400 பேரைக் கொன்ற ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.
குடியிருப்புப் பகுதிகள், மருத்துவமனைகள், அகதிகள் முகாம்கள் மற்றும் பள்ளிகள் உள்ளிட்ட பொதுமக்களின் பகுதிகளைத் தாக்கிய இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்களில் 9,700க்கும் மேற்பட்ட உயிர்களை இழந்துள்ளன என்று பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகத்தை மேற்கோள் காட்டி CNN செய்தி வெளியிட்டுள்ளது. இது தவிர தொலைத்தொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் காசா பகுதியின் பல்வேறு பகுதிகளில் நிலையான, செல்லுலார் மற்றும் இணைய சேவைகள் உட்பட தகவல் தொடர்பு சேவைகள் படிப்படியாக மறுசீரமைக்கப்படுவதாக தகவல் வந்துள்ளன.
அக்டோபர் 7 முதல் காஸா மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் 9000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையில் 4,800 குழந்தைகள் என கூறப்படுகிறது. அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு காஸாவில் மோதல் தீவிரமடைந்தது. சுமார் 2,500 பயங்கரவாதிகள் காசா பகுதியிலிருந்து இஸ்ரேலுக்குள் எல்லையை அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் 1,400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…