இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே, கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் இன்று வரை கடும்போர் நடந்து வருகிறது. தொடர்ந்து 36 வது நாளாக நடந்து வரும் இந்த போரில் இதுவரை இஸ்ரேல் இரண்டுகட்டமாக வான்வழி தாக்குதல் நடத்திய நிலையில், மூன்றாவது கட்டமாக தரை வழி தாக்குதலைத் தொடங்கியது.
இஸ்ரேல் ராணுவத்தின் நஹாஸ் காலாட்படை பிரிவினர் காஸாவில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியதால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவிலிருந்து வெளியேறியுள்ளனர். இந்த போர் தொடங்கியதில் இருந்து இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டுவருகிறது. காசா சுகாதார அமைச்சகத்தின்படி, 11,070 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், ஹமாஸ் பயங்கரவாதக் குழு 200க்கும் மேற்பட்ட பணயக் கைதிகளை சிறைபிடித்தனர். அவர்களை விடுவிக்க இஸ்ரேல் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பணயக்கைதிகளை விடுவிக்கும் வரை, காசா நகரத்திற்கு மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிபொருள் எதுவும் வழங்கப்படாது என்றும் இஸ்ரேல் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இதனால் தங்களிடம் இருக்கும் சில வெளிநாட்டு பிரஜைகளுடன் பல பணயக்கைதிகளையும் அடுத்த சில நாட்களில் விடுவிப்போம் என்று ஹமாஸ் கூறியது. அதன்படி, இஸ்ரேலும் ஹமாஸும் தற்போது பணயக்கைதிகளை விடுவிக்கும் இரண்டு திட்டங்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
அதாவது குறைந்த எண்ணிக்கையிலான மக்களை விடுவிக்க வேண்டும் மற்றும் காஸாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 100 அல்லது அதற்கு மேற்பட்ட பொதுமக்களை விடுவிப்பது குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. முதலில், ஹமாஸ் 10 முதல் 20 பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும்.
இதில் இஸ்ரேலிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் வெளிநாட்டவர்கள் அடங்குவர். இதற்கு ஈடாக இஸ்ரேல் ஒரு சிறிய இடைநிறுத்தம் செய்யும் என்று கூறப்படுகிறது. இந்த முன்மொழிவுகளுக்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டால், அதைத்தொடர்ந்து சுமார் 100 பொதுமக்கள் விடுவிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…