இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்.. லெபனானில் ஹமாஸ் தலைவர் பலி.!
லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இதுவரை 2000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், விடாமல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இஸ்ரேல் : வடக்கு லெபனானின் திரிபோலியில் உள்ள பாலஸ்தீன அகதிகள் முகாம் மீது, இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் ராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாம் பிரிகேட்ஸின் உயர் பதவியில் இருந்த சயீத் அட்டாலா அலி கொல்லப்பட்டார்.
மேலும், இந்த தாக்குதலில் அலியின் குடும்ப உறுப்பினர்கள் மூவர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இதுவரை 2000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், விடாமல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக இஸ்ரேல் கடந்த மாதம் 23ஆம் தேதி லெபனான் மீது மிகப்பெரிய அளவிலான வான்வழி தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதலில் 127 குழந்தைகள் மற்றும் 261 பெண்கள் பலியாகியுள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் அந்நாடு எச்சரித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காசா நகர் மீது இஸ்ரேல் போர் தொடங்கி நாளை மறுநாளுடன் (திங்கட்கிழமை) ஓர் ஆண்டாகிறது. ஈரானின் ஆதரவை பெற்ற ஹமாஸ் அமைப் எதிரான இந்த போரில் காசாவில் சுமார் 42 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.