இஸ்ரேல் வான்வெளித் தாக்குதல் : ஈரானின் ராணுவ தளம் சேதம்!
ஈரானின் தெஹ்ரான் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் ரகசிய ராணுவ தளம் சேதமடைந்துள்ளது.
தெஹ்ரான் : ஈரானின் தலைநகரான தெஹ்ரான் பகுதியில், கோஜிர் இராணுவ தளத்தில் உள்ள நிலத்தடி சுரங்கப்பாதை அமைப்பு மற்றும் ஏவுகணை தயாரிக்கும் தளங்களை என ஈரான் ரகசியமாக செயல்படுத்தி வருவதாகக் கூறப்பட்ட நிலையில் அங்கும் இஸ்ரேல் தற்போது தாக்குதல் நடத்தி இருக்கிறது.
கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த காசா-இஸ்ரேல் போரில், ஆதரவாக ஹிஸ்புல்லாக்களும், ஹமாஸ் அமைப்பும் களமிறங்கியது. இந்த விளைவாக இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதலில் ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த அமைப்புகளுக்கு ஆதரவாக களமிறங்கிய ஈரான் நாட்டு ராணுவத்தையும் விட்டு வைக்காமல் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக சமீபத்தில் ஈரான் இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில், முன்னதாக தெரிந்தவுடன் இஸ்ரேல் வானிலேயே இடைமறித்து பாதி ஏவுகணைகளை அளித்ததாக தெரிவித்திருந்தது.
இப்படி இருக்கையில், அணு ஆயுத சோதனை குறித்து ஈரான் பல ஆண்டுகளாக மறுப்பு தெரிவித்து கொண்டே வந்தது. ஆனால், உலக அளவில் சர்வதேச அணுசக்தி நிறுவனம் மற்றும் மேற்கத்திய புலனாய்வு அமைப்புகள் தெஹ்ரானில் 2003 ஆம் ஆண்டு வரை அணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டதாகக் கூறி வருகின்றனர்.
அதனால், ஈரான் அணு ஆயுத சோதனை வெற்றிகரமாக நடைபெற்றால் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தலாம் என எண்ணி இஸ்ரேல் இந்த தாக்குதலை மேற்கொண்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்தத் தாக்குதல் தொடர்பாக ஈரான் எந்த செய்தியையும் தற்போது வரை வெளியிடவில்லை.
ஆனால், செயற்கைக் கோள்கள் படங்களின் மூலமே இந்த தாக்குதலின் பாதிப்பு தெரிய வந்திருக்கிறது. அதே போல ஈரான் தரப்பிலும் இந்த தாக்குதல் குறித்து வெளிப்படையாக அறிவிக்கவில்லை. மேலும், இந்த பாதிப்புகள் குறித்த புகைப்படங்களும் ஈரான் ராணுவத்தினரால் வெளியிடப்படவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.