இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் ஓமனில் இருந்து நாடு கடத்தப்பட வாய்ப்பு..! அதிகாரிகளுடன் தொடர்பில் இந்தியா..!

Default Image

தீவிர இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் ஓமானில் இருந்து நாடு கடத்தப்பட வாய்ப்பு உள்ளது.

தீவிர இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் ஓமனில் இருந்து நாடு கடத்தப்பட வாய்ப்பு உள்ளது.  இஸ்லாமிய போதகர் ஜாகிர் நாயக் ஓமனில் இரண்டு விரிவுரைகளை வழங்க நாயக் அழைக்கப்பட்டுள்ளார். அதில் முதல் விரிவுரையான “தி குர்ஆன் ஒரு உலகளாவிய தேவை” (The Quran a Global Necessity) ஓமானின் அவ்காஃப் மற்றும் மத விவகார அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, மார்ச் 23 அன்று திட்டமிடப்பட்டது.

அதனால் அவர் மார்ச் 23 அன்று ஓமன் செல்ல உள்ளார். அவரது இரண்டாவது இரண்டாவது விரிவுரை “நபிகள் முஹம்மது மனித குலத்திற்கு ஒரு கருணை” (Prophet Muhammad [PBUH] A Mercy to Humankind) மார்ச் 25 அன்று மாலை சுல்தான் கபூஸ் பல்கலைக்கழகத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. அப்பொழுது ஓமன் செல்லவிருக்கும் ஜாகிர் நாயக்கை உள்ளூர் சட்டங்களின் கீழ் அவரை கைது செய்து இறுதியில் நாடு கடத்த உள்ளூர் இந்திய தூதரகம் ஓமன் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது.

உள்ளூர் அதிகாரிகள் தங்கள் கோரிக்கைக்குக் கட்டுப்பட்டு அவரைக் காவலில் வைக்க பலமான வாய்ப்புகள் இருப்பதாக இந்திய புலனாய்வு அமைப்புகளின் வட்டாரங்கள் தெரிவித்தன. முன்னதாக, 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற கத்தார் உலகக் கோப்பையில் (FIFA) மதப் பிரசங்கம் செய்ய நாயக் அழைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் பணமோசடி மற்றும் வெறுப்பு பேச்சு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நாயக், 2017 முதல் மலேசியாவில் வாழ்ந்து வருகிறார். 2016 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நாயக்கின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையை (IRF) இந்தியா தடைசெய்தது. பின்னர் மார்ச் 2022 இல், உள்துறை அமைச்சகம் (MHA) இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையை ஒரு சட்டவிரோத சங்கமாக அறிவித்தது மற்றும் அதை ஐந்தாண்டுகளுக்கு சட்டவிரோதமாக்கியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்