உலக சுகாதார நிறுவனத்தை மஸ்க் வாங்கப்போகிறாரா… ட்விட்டர் பயனரின் கேள்விக்கு சூசகமாக பதில்.!

Elon Musk WHO

ஒருவர் பில் கேட்ஸிடமிருந்து உலக சுகாதார நிறுவனத்தை வாங்குவீர்களா என எலான் மஸ்கிடம் கேட்டதற்கு அது எவ்வளவு என மஸ்க் பதில் ட்வீட்.

உலகின் மிகப்பெரும் பணக்காரரான எலான் மஸ்கிடம், ட்விட்டரில் தொழிலதிபர் ஒருவர் உலக சுகாதார நிறுவனத்தை(WHO) பில் கேட்ஸிடம் இருந்து வாங்குவீர்களா என கேட்டு ட்வீட் செய்துள்ளார். அதற்கு எலான் மஸ்க்கும் ட்விட்டரில், அது எவ்வளவு விலை என்று பதில் ட்வீட் செய்துள்ளார்.

ட்விட்டரில் டாக்டர் எலி டேவிட் என்ற தொழிலதிபர், எலான் மஸ்கிடம் பில் கேட்ஸிடம் இருந்து உலக சுகாதார நிறுவனத்தை வாங்கி, அதனை ஆரோக்கியத்திற்கான மையமாக மாற்ற முடியுமா என கேட்டுள்ளார். டாக்டர் எலி டேவிட்டின் ட்வீட்டிற்கு மஸ்க்கும் பதில் டிவீட் செய்துள்ளார். அது எவ்வளவு விலை என்று பதிலளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ட்விட்டரில் பயனர்கள் சிலர், எலான் மஸ்க் WHO வை வாங்க வேண்டுமா? வேண்டாமா? என வாதிட்டு வருகின்றனர். மேலும் சிலர் ட்விட்டர் கருத்து கணிப்பையும் தொடங்கியுள்ளனர். மஸ்க் கடந்த வருடம் இதே போல தான் ட்விட்டரையும் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்