உலகத்தில் இருக்கும் பல விலங்குகளுக்கு விசித்திரமான குறும்புகளால் நம்மை மகிழ்வித்து வருகிறது என்றே கூறலாம். இதனால் பலருக்கும் விலங்குகள் பிரியம். மேலும், சில விலங்குகள் செய்யும் ஒரு சில பயங்கரமான செயல்களால் ஒட்டுமொத்த விலங்குகள் மீதும் பயம் வருகிறது.
அந்த வகையில், சமீபத்தில் ஒரு பெண் தண்ணீர் கொடுக்கும் போது ஆமை அவரை தாக்கிய சம்பவத்தை எதிர்கொண்டார். இது தொடர்பான நெஞ்சை பதற வைக்கும் வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
ட்விட்டரில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ” ஆமை ஒன்று வெப்ப நிலை தாங்காமல் தண்ணீருக்காக காத்திருந்துள்ளது. இதனை பார்த்த ஒரு பெண் பாட்டில் மூலம் தண்ணீரை கொடுக்கிறார். அதனை வேகமாக அந்த ஆமையும் குடிக்கிறது. இதன் மூலமே அது எவ்வளவு தாகமாக இருக்கிறது என தெரிகிறது .
ஆமைக்கு தண்ணீர் கொடுத்த பெண் “அவனுக்கு ரொம்ப தாகமா இருக்கு பாரு” என்று வீடியோவில் கூறுகிறார். சில வினாடிகளுக்குப் பிறகு, தண்ணீர் வழங்குவதை நிறுத்தி, அதை விலங்குகளின் முகத்தில் ஊற்றினார். இதைச் செய்தவுடன், ஆமை வாயைத் திறந்து அந்தப் பெண்ணின் மீது தாக்குதல் நடத்துகிறது. அதிர்ஷ்டவசமாக, இடையில் வேலி இருந்த காரணத்தால் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தண்ணீர் கொடுத்தது ஒரு குத்தமா..? என நகைச்சுவையாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…