தண்ணீர் கொடுத்தது ஒரு குத்தமா..? பெண்ணை தாக்க முயன்ற ஆமை…வைரலாகும் வீடியோ.!!

turtles attack

உலகத்தில் இருக்கும் பல விலங்குகளுக்கு விசித்திரமான  குறும்புகளால் நம்மை மகிழ்வித்து வருகிறது என்றே கூறலாம். இதனால் பலருக்கும் விலங்குகள் பிரியம். மேலும், சில விலங்குகள் செய்யும் ஒரு சில பயங்கரமான செயல்களால் ஒட்டுமொத்த விலங்குகள் மீதும் பயம் வருகிறது.

அந்த வகையில், சமீபத்தில் ஒரு பெண் தண்ணீர் கொடுக்கும் போது ஆமை  அவரை தாக்கிய சம்பவத்தை எதிர்கொண்டார். இது தொடர்பான நெஞ்சை பதற வைக்கும் வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

ட்விட்டரில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் ” ஆமை ஒன்று வெப்ப நிலை தாங்காமல் தண்ணீருக்காக காத்திருந்துள்ளது. இதனை பார்த்த ஒரு பெண்  பாட்டில் மூலம் தண்ணீரை கொடுக்கிறார். அதனை வேகமாக அந்த ஆமையும் குடிக்கிறது.  இதன் மூலமே அது எவ்வளவு தாகமாக இருக்கிறது என தெரிகிறது .

ஆமைக்கு தண்ணீர் கொடுத்த பெண்  “அவனுக்கு ரொம்ப தாகமா இருக்கு பாரு” என்று வீடியோவில் கூறுகிறார்.  சில வினாடிகளுக்குப் பிறகு,  தண்ணீர் வழங்குவதை நிறுத்தி, அதை விலங்குகளின் முகத்தில் ஊற்றினார். இதைச் செய்தவுடன், ஆமை வாயைத் திறந்து அந்தப் பெண்ணின் மீது தாக்குதல் நடத்துகிறது. அதிர்ஷ்டவசமாக, இடையில் வேலி இருந்த காரணத்தால் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் தண்ணீர் கொடுத்தது ஒரு குத்தமா..? என நகைச்சுவையாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்