ஈரான் அதிபர் மரணம் ! உலக அளவில் தங்கம், பெட்ரோல் விலை உயரும் அபாயம் ?
சென்னை : ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மரணத்தால் உலகம் முழுவதும் தங்கம் மற்றும் கச்சா எண்ணெயின் விலையானது அதிகரிக்க அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிகிறது.
ஈரான் அதிபரான இப்ராஹிம் ரைசி கடந்த ஞாயிற்றுகிழமை அன்று ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். அதிபரின் மறைவுக்கு ஈரான் அரசு 5 நாட்கள் துக்கம் அனுசரித்து கொண்டு வருகிறது. மேலும், சில உலகநாடுகளும் இந்த துக்கத்தில் பங்காற்றி வருகின்றனர். அதை தொடர்ந்து ஈரானின் உச்ச தலைவர் கமேனி அதிகாரப்பூர்வமாக ஈரானின் தற்காலிக ஜனாதிபதியாக முஹம்மது முக்பர் செய்யப்படுவார் என அறிவித்திருந்தார்.
மேலும், ஈரானின் 14வது அதிபர் தேர்தல் வருகிற ஜூன் 28-ம் தேதி நடைபெறும் என தகவல்களும் வெளியாகி இருந்தது. இந்நிலையில், உலக அளவில் அதிர்ச்சி அளிக்க கூடிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது அது என்னவென்றால் அதிபர் ரைசியின் மரணத்தால் உலக அளவில் பெரிதளவிலான பொருளாதார தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், தங்கம் மற்றும் கச்சா எண்ணெயின் விலையானது அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வெளியான தகவல்களின் மூலம் தெரிகிறது.
ஈரான் அதிபர் ரைசியின் மரணத்தை தொடர்ந்து திங்கள்கிழமை அன்று நடந்த சர்வதேச சந்தையில் வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. அதாவது (West Texas Intermediate) கச்சா எண்ணெய் விலையானது 0.41% அளவுக்கும், பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.48% அளவுக்கும் ஒரே நாளில் உயரத்துள்ள்ளது. ஈரானில் தற்போது உள்ள நிலைமையின் அடிப்படையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுவதால்ல் பெட்ரோல், டீசல் விலை உயரும் ஆபத்தும் உருவாகியுள்ளது.
இதில் இந்தியா உலகநாடுகளிடமிருந்து தனது கச்சா எண்ணெய் தேவையில் 85% இறக்குமதி செய்கிறது. அதிலும் ஈரானிடமிருந்து கணிசமான அளவிற்கு இறக்குமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பங்குச்சந்தையில் கடும் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் முதலீட்டார்கள் தங்கத்தை நோக்கி சென்று விட்டனர், அதனால் அதற்குரிய டிமாண்டும் அதிகரித்து தங்கத்தின் விலையும் தற்போது உயர்ந்துள்ளது. இவையெல்லாம் ஈரானில் ஒரு நிலையான தலைமை உருவாகும் வரை இந்த நிலைமை மாறாது என்று பொருளாதார நிபுணர்களால் கூறப்படுகிறது.