காசாவில் இருந்து பொதுமக்கள் இன்று மாலைக்குள் வெளியேற இஸ்ரேல் கெடு விதித்த நிலையில், ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் குழுவினர் இடையே 8வது நாட்களாக தொடர் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதுவரை, ஹமாஸ்–இஸ்ரேல் தாக்குதலில் இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 3000-ஐ கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக இருளில் மூழ்கிய காசா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
தற்போது, காசா பகுதியில் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தண்ணீரின்றி உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளனர் என்று ஐநா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 3.4 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு எல்லைப்பகுதியில் உள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஐநா கூறியுள்ளது.
“ஐஎஸ்ஐஎஸ்” இயக்கம் ஒடுக்கப்பட்டது போல் “ஹமாஸ்” இயக்கம் ஒடுக்கப்படும் – இஸ்ரேல் பிரதமர் பேட்டி!
இதற்கிடையில், லெபனானுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில், 724 குழந்தைகள் உட்பட 2,215 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் : ஈரான் அதிபர் – சவுதி இளவரசர் தொலைபேசியியில் முக்கிய ஆலோசனை.!
இந்நிலையில், இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸில் சேர முழுமையாக தயார் என்று ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ள நிலையில், காசா மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் மற்ற நாடுகளுக்கும் போர் பரவும், இதனால் காசா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் விரைவில் நிறுத்த வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…