அடுத்த அடி இன்னும் உக்கரமாக இருக்கும்… இஸ்ரேலுக்கு ஈரான் மீண்டும் எச்சரிக்கை!
Iran Israel Conflict: அடுத்த தாக்குதல் பயங்கரமாக இருக்கும் என்று இஸ்ரேலுக்கு ஈரான் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது காசாவை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினர் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். ஆக்கிரமைப்பு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை மேற்கொண்டது.
இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் செங்கடல் பகுதியில் இஸ்ரேல் நாட்டுக்கு செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பினர் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். ஈரான் நாட்டு ராணுவம் ஆதரவு பெற்ற இந்த ஹவுதி அமைப்பினர் (ஆயுதக்குழு) இஸ்ரேளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வந்தனர்.
இந்த சூழலில் சிரியா தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக மீது இம்மாதம் தொடக்கத்தில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இது இரு நாட்டு இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் புரட்சிப்படை தளபதி உட்பட 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி, கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஈரான் 100க்கும் மேற்பட்ட ஏவுகணை மற்றும் டிரோன்களை வீசி பயங்கர தாக்குதலை நடத்தியது. இது இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக நடத்திய முதல் தாக்குதலாகும்.
இந்த தாக்குதளுக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் எச்சரிக்கை விடுத்து, பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இந்த சூழலில் ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் திட்டமிட்டு இருந்த நிலையில், நேற்று அதிகாலை ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டது. ஈரானின் இஸ்பஹான் நகரில் உள்ள விமானப்படை தளத்தில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனால் அப்பகுதியில் மேலும் பதற்றம் அதிகரித்தது. அதுமட்டுமில்லாமல், இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தினால் அடுத்த நொடிகளில் நாங்கள் தாக்குவோம் எனவும் ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் இஸ்ரேல் மீது எந்த நேரத்திலும் ஈரான் தாக்குதல் நடத்தலாம் என பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில் எங்களது அடுத்த தாக்குதல் இன்னும் உட்சபட்ச பயங்கரமாக இருக்கும் என்று இஸ்ரேலுக்கு ஈரான் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் வெளியுறவு துறை அமைச்சர் கூறியதாவது, ஏவுகணை தாக்குதல் குறித்து விசாரித்து வருகிறோம். இதில் இஸ்ரேலுக்கு தொடர்பு இருப்பது இதுவரை உறுதியாகவில்லை. எங்கள் நாட்டு மீது வீசப்பட்ட டிரோன்கள் பறந்து கீழே விழுந்துவிட்டன.
அது எங்கள் குழந்தைகள் விளையாடும் பொம்மைகள் போன்றவை, ட்ரோன்கள் அல்ல என விமர்சித்தார். மேலும், இஸ்ரேல் ஈரானின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டால், அடுத்த பதிலடி உடனடியாக மற்றும் அதிகபட்ச அளவில் உக்கிரமாக இருக்கும் என்று அமிரப்துல்லாஹியன் எச்சரித்தார்.