Categories: உலகம்

டிரம்ப் மீதான தாக்குதலில் ஈரானுக்கு தொடர்பா.? விளக்கம் அளித்த அந்நாட்டு அரசு.!

Published by
மணிகண்டன்

டொனால்ட் டிரம்ப்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது சில தினங்களுக்கு முன்னர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடைபெற்றது. பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் டிரம்ப் கலந்து கொண்ட போது 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் துப்பாக்கியால் சுட்டதில் டிரம்பின் காது பகுதி காயமடைந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் தாமஸ் மேத்யூ க்ரூக்ஸை சுட்டு கொன்றனர்.

டிரம்ப் மீதான இந்த கொலை முயற்சி தாக்குதல் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதில் முக்கிய தகவலாக, இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு முன்னதாக, ட்ரம்பைக் கொலை செய்ய ஈரான் அமைப்பு சதித்திட்டம் திட்டியதாக அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததாக CNN செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது.

அதாவது,  2020ஆம் ஆண்டு டிரம்ப் அதிபராக இருந்த போது ஈரான் உயர்மட்ட ராணுவ தலைவர் காசிம் சுலைமானி அமெரிக்காவின் தாக்குதலில் உயிரிழந்தார். சுலைமானி உயிரிழப்புக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக கூட டிரம்ப் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் இதனை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி புதன்கிழமை அந்நாட்டு ஊடகத்திற்கு அளித்த செய்தி குறிப்பில், ‘ ட்ரம்ப் மீதான சமீபத்திய தாக்குதலில் ஈரான் எந்தவிதத்திலும் ஈடுபடவில்லை. இந்த குற்றசாட்டுகளை ஈரான் அரசு கடுமையாக நிராகரிக்கிறது. ஈரான் நாட்டின் பார்வையில் ட்ரம்ப் ஒரு குற்றவாளி. சுலைமானியின் படுகொலைக்காக அவர் நீதியின் முன் நிறுத்தப்படுவார். ஈரான் ட்ரம்பை சட்டத்தின் வழியில் சந்திக்கும் என்று திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

பெரியாரை விமர்சிப்போரை அடையாளம் காட்ட விரும்பவில்லை…  மு.க.ஸ்டாலின் ‘சைலன்ட்’ விமர்சனம்!

சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…

4 hours ago

மகா கும்பமேளா 2025-12 வருடங்களுக்கு ஒருமுறை வர காரணம் என்ன தெரியுமா ?

இந்தியாவில் நடைபெறும்  மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…

4 hours ago

‘பெண்கள் படிக்கவே கூடாது!’ அடம்பிடிக்கும் ஆப்கான்! அழைப்பு விடுத்த பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…

4 hours ago

தினமும் எண்ணெய் தேய்க்கலாமா? கூடாதா? மருத்துவர்கள் கூறுவதென்ன?

தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…

5 hours ago

பொங்கல் டேஸ்டா வர இந்த டிப்ஸ் எல்லாம் பாலோ பண்ணுங்க..!

சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…

5 hours ago

அஜித்குமார் ஏன் ரேஸில் பங்கேற்கவில்லை? அடுத்தகட்ட முடிவுகள் என்ன? முழு அறிக்கை இதோ…

துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…

5 hours ago