ஆப்பிள் நிறுவனத்துக்கு செக் வைத்த பிரேசில் அரசு..18 கோடி ரூபாய் அபராதம்..!
ஐபோன் 12 மற்றும்13 மாடல்களுடன் பெட்டியில் சார்ஜரைச் சேர்க்காததற்காததால், வாடிக்கையாளர்களுக்கு முழுமையடையாத தயாரிப்புகளை வழங்கப்பட்டதாகக் கூறி, ஆப்பிள் பிஆர்எல் நிறுவனத்திற்கு பிரேசில் அரசாங்கம் 12.275 மில்லியன் (சுமார் ரூ. 18 கோடி) அபராதம் விதித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கான முயற்சிகளில் ஒரு பகுதியாக, 2020 ஆம் ஆண்டில் ஐபோன் 12 மாடல் அறிமுகத்துடன் சார்ஜர்களைச் சேர்ப்பதை நிறுவனம் நிறுத்தியது. சார்ஜரைத் தவிர்ப்பது சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் என எந்த ஆதாரமும் இல்லை என்று இந்த வாதங்களை நீதி அமைச்சகம் நிராகரித்ததாக கூறப்படுகிறது.
மேலும் , பிரேசில் நீதி அமைச்சகம் ஆப்பிள் ஐபோன் 12 மற்றும் புதிய மாடல்களை விற்பனை செய்வதை நிறுத்த உத்தரவிட்டுள்ளது. சார்ஜரை விலக்குவது “நுகர்வோருக்கு எதிரான நடைமுறை” என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.