IPhone Rescue: அலாஸ்காவின் பணியில் சிக்கிக் கொண்ட நபரை மீட்ட ஐபோன் 14 SOS
அலாஸ்காவின் கிராமப்புற பகுதியில் ஸ்னோமொபைலில் பயணித்து வழி தெரியாமல் சிக்கித் தவித்த நபரை ஐபோன் அவசரகால அழைப்பின் மூலம் மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சமீபத்தில் வெளியான ஐபோன் 14 இல் அவசர SOS என்ற புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது.இதன் மூலம் பயனர்கள் வழி தெரியாமல் முற்றிலுமாக தொடர்புகளை இழந்து இணையம்,தொலைபேசி இணைப்பு இல்லாத பகுதிகளில் செயற்கைக்கோள் வழியாக அவசர சேவைகளைத் தொடர்புகொள்ள பயனர்களுக்கு இந்த அம்சத்தை வழங்குகிறது.
MacRumors இன் அறிக்கையின்படி, ஒரு நபர் சமீபத்தில் அலாஸ்கா மாநிலத்தின் கிராமப்புற பகுதியில் ஸ்னோமொபைலில் பயணித்து வழி தெரியாமல் சிக்கித் தவித்தபோது இந்த அம்சத்தை சோதனை செய்துள்ளார்.இந்த அவசரகால அழைப்பை பெற்ற ஆப்பிள் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் சென்டர் குழு, உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மீட்புக் குழுக்களுடன் இணைந்து அவர் அனுப்பிய ஜிபிஎஸ் அடையாளத்தை வைத்து தேடியுள்ளது.
அவர் இருக்கும் இடத்தை ஜிபிஎஸ் உதவியுடன் தெரிந்துகொண்ட மீட்புக்குழு அவரை 69° அட்சரேகைக்கு அருகில் கண்டுபிடித்துள்ளது.ஆனால் 62° அட்சரேகைக்கு மேல் உள்ள இடங்களில் செயற்கைக்கோள் இணைப்பு வேலை செய்யாது என்று ஆப்பிள் கூறி இருந்த நிலையில் இந்த மீட்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.