இஸ்ரேல் பிரதமருக்கும், ஹமாஸ் தலைவருக்கும் எதிராக கைது வாரண்ட்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் ஹமாஸ் தலைவர் ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்து சர்வேதச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Israel PM Benjamin Netanyahu

கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு – இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது வரையில் காசாவில் குறிப்பிட்ட இடங்களில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி தான் வருகிறது.

ஹமாஸ் அமைப்பை முழுதாக அழிக்கும் வரையில் ஹமாஸ் மீதான தாக்குதலை நிறுத்த போவதில்லை என  இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறி தாக்குதலை தொடர்ந்து வருகிறார்.  ஹமாஸ் அமைப்பு – இஸ்ரேல் போர் காரணமாக  பாலஸ்தீன மக்களின் தொடர் உயிரிழப்புக்கு எதிராக பல்வேறு நாடுகள் தாக்குதலை நிறுத்த கோரி வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து சர்வதேச குற்றவியல் சம்பவங்களை விசாரணை செய்யும்,  சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு , முன்னாள் இஸ்ரேலிய ராணுவ தளபதி மற்றும் ஹமாஸ் தலைவர் தியாப் இப்ராஹிம் அல் மஸ்ரி ஆகியோர் மீது கைது வாரண்டை பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து இவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தரப்பு கூறிய விளக்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.  இஸ்ரேலும், அமெரிக்காவும்  இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் உறுப்பினர்களாக இல்லாததால், இந்த பிடிவாரண்ட் பெரிய அளவில் நடைமுறை தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்