தீவிரமடையும் ஹமாஸ் – இஸ்ரேல் போர்: பலி எண்ணிக்கை 3000-ஐ கடந்தது.!

Isrel

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே 5வது நாளாக போர் தீவிரமடைந்து உள்ளது. ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்திய நிலையில்,இஸ்ரேல் தரப்பும் பதில் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது.

தற்போது, இஸ்ரேல் ராணுவமானது அமெரிக்கா உதவியுடன் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருப்பதாக கருதப்படும் காசா நகரில் தற்போது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது இஸ்ரேல்.

இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் 3000 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ள நிலையில், அவர்களுக்கு போதிய மருத்துவ வசதி இல்லாமல் தவித்து வருவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

காசாவின் முக்கிய பகுதிகளில் பல்வேறு கட்டிடங்கள் மீது, இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. காசா ஹமாஸ் அமைப்பினர் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதுவரை 2.6 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு உள்ளனர் என ஐநா தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, உள்ளிட்ட நாடுகள் ஒன்றாக இணைந்து கூட்டறிக்கையை வெளியிட்டனர். இந்த நிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் படை இடையேயான போரில் இஸ்ரேலுக்கு உதவ ஆயுதங்களுடன் அமெரிக்க விமானம் இஸ்ரேலுக்கு வந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்