18,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய போகும் இன்டெல் ..! காரணம் என்ன?

Intel - Layoff

இன்டெல் : அமெரிக்கவின் சிப் தயாரிக்கும் முன்னணி நிறுவனம் தான் ‘இன்டெல்’. தற்போது சாம்சங், டிஎஸ்எம்சி, எஸ்கே ஹைனிக்ஸ் போன்ற பல சிப்கள் தயாரிக்கும் தற்போது வந்தாலும், இன்டெல் சிப்க்கான தனித்துவம் என்பது இன்று வரை இருந்து வருகிறது என்றே கூறலாம்.

ஆனால், ஏஐ சிப்களுக்கான சந்தையில் இன்டெல்லின் பின்தங்கி இருப்பதால் இந்த ஆண்டில் இதுவரை அதன் பங்குகள் 40% சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைத்துள்ளது. இந்த பெரும் சரிவை மீட்டெடுப்பதற்கு இன்டெல் நேற்று (ஆகஸ்ட்-1) புதிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளது.

அது என்னவென்றால் இன்டெல் 15% சதவீதத்திற்கும் அதிகமான ஊழியர்களை அதாவது சுமார் 18,000 ஊழியர்களை பணிநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

இப்படி செய்வதனால் நடப்பாண்டில் இன்டெல் நிறுவனத்தின் சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள், அதாவது இந்திய மதிப்பிக் சொல்லப் போனால் 83,000 கோடி ரூபாய் மதிப்பிலான செலவைக் குறைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டின் இறுதியில் 1,24,800 பணியாளர்களைக் கொண்டிருப்பதாக இன்டெல் அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது அறிவித்துள்ள பணிநீக்க நடைவடிக்கைகளை பார்க்கும் போது சுமார் 18,000 ஊழியர்களின் பணிகளை பறிக்கும் என கருதப்படுகிறது.

அதே போல இஸ்ரேலில் உள்ள சிப் தயாரிப்பு ஆலையை விரிவுபடுத்தும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது இன்டெல் நிறுவனம். பல ஆண்டுகளாக சிப்களுக்கான சந்தையில் இன்டெல் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் சமீபத்திய ஆண்டுகளில், அவர்களின் போட்டியாளரான என்விடியா (NVIDIA) AI புராசசர்களில் முன்னணியில் உள்ளது.

இதனால் இன்டெலுக்கு பல சவால்களை கண்டு சரிவையும் கண்டது. இப்படி பின்னடைவை சந்தித்த பிறகு, செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் கவனம் செலுத்த உள்ளதாக இன்டெல் நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்